சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் முதல் ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வருகிறது. இந்த மாதமும் இதேநிலைதான் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,830க்கும், சவரன் 38,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 23 அதிகரித்து ஒரு கிராம் 4,853க்கும், சவரனுக்கு 184 அதிகரித்து ஒரு சவரன் 38,824க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது.
அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 33 அதிகரித்து ஒரு கிராம் 4,863க்கும், சவரனுக்கு 264 அதிகரித்து ஒரு சவரன் 38,904க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 264 அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 183 ரூபாய் குறைந்து 4,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1000-க்கு மேல் குறைந்துள்ளது சமீபத்தில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து 65 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.