முகேஷ் அம்பானியின் "மாஸ்டர் பிளான்"..! தயாராகிறது பேஸ்புக் நிறுவனம்..! உலக அளவில் பெரும்புரட்சிக்கு தயார்

By ezhil mozhi  |  First Published Apr 18, 2020, 12:51 PM IST

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பேஸ்புக் ஆகியவை  இணைந்துஊர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக  ஓர் புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது  


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பேஸ்புக் ஆகியவை  இணைந்துஊர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக  ஓர் புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது  

அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள  WeChat போல ஒரு சூப்பர் ஆப்பினை உருவாக்கி அதன் மூலம் கேமிங், ஹோட்டல் பதிவு, டிஜிட்டல் மணி டிரான்ஸ்பர், என பலவகையில் பயனுள்ளதாக இந்த ஆப் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த ஆப் மூலம் ரிலையன்ஸ் வர்த்தக கடைகள், Link ஹோட்டல் புக்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றினை அனுமதிக்கும். மேலும் பல சிறப்பு பண்புகளை கொண்டு உருவாக்க உள்ள இந்த செயலி உருவாக்கத்தில் முதலீட்டு வங்கியாளராக மார்கன் ஸ்டான்லி இணையப்போகிறாராம். இது குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை தெரியப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில தற்போது  கொரோனாவால் உலகமே பெரும் அவதிக்குள்ளாகி வரும் சமயத்தில் முழு வீச்சில் ஈடுபடாமல் செயல்திட்டம் அளவிலேயே தற்போது உள்ளதாம்.

இந்த ஆப்ஸ் பயன்பாட்டிற்கு வரும் தருணத்தில் விற்பனைக்காக ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் இதில் பொருட்களை வாங்க ஜியோ மணியையும் இணைக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.எனினும் தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் இந்த திட்டம் பற்றி முழுமையான திட்டம் இன்னும் எதுவும் வெளியிடபடவில்லை.

Latest Videos

undefined



இந்த செயலி பயன்பாட்டிற்கு வந்தால் கண்டிப்பாக உலக சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.ஏற்கனவே  ஜியோ வந்த பிறகு தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் மாற்றம் கொண்டு வந்தது. இதே போன்று புது  செயலி அறிமுகம் செய்தாலும் மற்ற போட்டியாளர்களுக்கு பெரும் டஃ ப் தான் என இப்போதே கருத்து  வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

click me!