கொரோனா வைரஸ்க்கு பயந்து தனிமைக்கான தனி அறை இல்லாதவர்கள் மேற்கு வங்க இளைஞர்கள் மரங்களில் குடியிருந்து வருவம் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
T.Balamurukan
கொரோனா வைரஸ்க்கு பயந்து தனிமைக்கான தனி அறை இல்லாதவர்கள் மேற்கு வங்க இளைஞர்கள் மரங்களில் குடியிருந்து வருவம் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் வேலை பார்த்த மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தை சேர்ந்த வான்ஜிடி கிராமவாசிகள் தங்களது சொந்த மாவட்டத்துக்கு திரும்பினர்.
undefined
மருத்துவ விஞ்ஞானிகளின் அறிவுரைப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய ஒருவர் குறைந்தபட்சம் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். மேற்குவங்கத்தில் வான்ஜிடி கிராமத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தனி அறைகள் கிடையாது. அப்புறம் எப்படி அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள முடியும். பார்த்தார்கள் அங்குள்ள இளைஞர்கள் நேரராக அந்த பகுதிகளில் உள்ள பெரிய மரங்களுக்கு சென்று மரத்தில் 14 நாட்கள் தங்குவதற்காக முகாம்களை அமைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
தற்போது, அதில் தங்கி தங்களை தனிமைப்படுத்தி வசித்து வருகிறார்கள்.முன்பு இந்த மரங்கள் ஊருக்குள் யானைகள் வருகிறதா என்பதை கண்காணிக்க பயன்பட்டது. தற்போது கிராமவாசிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அந்த மரங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் மொத்தம் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளனர். ஒருவர் கொரோனா வைரஸ்க்கு பலியாகி உள்ளார்கள். உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில் இதுபோன்று மக்களே தாங்களாக முன்வந்து தனிமைப்படுத்திகொண்டிருப்பது வரவேற்ப்பை பெற்றுள்ளது.