வேகமாக பரவும் கொரோனா ... ஊரடங்கு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விதித்த முக்கிய உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Dec 29, 2020, 10:52 AM IST
Highlights

லண்டனில் இருந்து நாடு திரும்புபவர்களால் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. 

லண்டனில் இருந்து நாடு திரும்புபவர்களால் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. வரும் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜனவரி 31 வரை இந்த ஊரடங்கு நீடிக்கும் என நேற்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பிரிட்டனில் இருந்து தாயகம் திரும்புவார்களால் இந்த கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் பெரும் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்தநிலையில் பிரிட்டனில் இருந்து பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று எதிரொலி காரணமாக தேவைப்பட்டால் இரவுநேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. 

click me!