பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?

By vinoth kumarFirst Published Jan 14, 2021, 11:00 PM IST
Highlights

பொங்கல் ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். வானத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன.தீயினால் புதுப்பானையில் உள்ள அரிசி, நீரில் வெந்து பொங்கலாகிறது. 

பொங்கல் ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். வானத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன.தீயினால் புதுப்பானையில் உள்ள அரிசி, நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின்றவர்கள், ஐம்பெரும் பூதங்களையே வழிபடுகின்றனர் என்பார்கள். இந்த பூமியில் சூரியவழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது.

நம்நாடு சூரிய அக்னி மிகுந்த நாடு.பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக வேதம் குறிப்பிடுகிறது.புராணங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள். சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று கொனார்க் கோயில்.கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் பல ஆயிரம் ஆண்டு முன்பே இதைக் கட்டினார்.கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள்.

பகவத்கீதையில் கண்ணபிரான் பொங்கல் பண்டிகையில் நாம் ஏன் கடவுளைப் பிரார்த்திக்கிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் ஒளியிலே ஈடுபட்டு வந்தார்கள்.சூரிய கிரணங்களை உயிர்மை என்றும் ஆயுளை வளர்க்கும் அன்னம் என்றும் கருதினார்கள்.

உலகுக்கே வெளிச்சம் தரும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் தொன்றுதொட்டு சூரியனை போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. இதை யாராலும் மறுக்கவும் முடியாது.

click me!