Gold Jewellery Cleaning Tips : தங்க நகைகளை தொடர்ந்து பயன்படுத்தும் போது அவை சற்று மங்கி பழைய நகைகள் போல காட்சியளிக்கும். அவற்றை எவ்வித செலவுகளும் இல்லாமல் வீட்டில் வைத்து புதியது போல மாற்றம் செய்ய பயனுள்ள சில குறிப்புகளை காணலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை தங்க நகைகளுக்கென்று தனி மவுசு உண்டு. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை தங்கம் வாங்கி சேர்ப்பதை அதிகம் விரும்புவார்கள். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும் போது தங்க நகைகள் சற்று மங்கி காணப்படும். தொடர்ச்சியாக தங்க நகைகளை அணிந்து கொள்பவர்கள் அதன் பளபளப்பு தன்மை குறைவது குறித்து வருத்தம் கொள்வார்கள். இனிமேல் இவ்வாறு வருத்தம் கொள்ள தேவையில்லை. வீட்டில் வைத்து குறைந்த செலவில் தங்க நகைகளை புதிது போல மாற்றம் செய்து பளபளப்பாக வைத்துக் கொள்ள எளிமையான வழிமுறைகள் இருக்கின்றன.
தங்க நகைகளை அவ்வப்போது பாலிஷ் செய்து பயன்படுத்துவது தான் புதிது போன்ற தோற்றத்தை அளிக்கும். இதற்கு கொஞ்சம் செலவாகும். நகை கடைகளில் நம் நகைகளை பாலிஷ் செய்வதற்கு தனி செலவு என்பதை விடவும் நாம் கொடுக்கும் நகைகளில் சில மில்லிகிராம் தங்கத்தையாவது நாம் இழக்க நேரிடும். நகைகளை புதிது போல வைத்திருக்க அவற்றின் மீது வேதியல் பொருட்களை பயன்படுத்தி முலாம் செய்வார்கள். மேலும் அதிகமான அழுத்தத்தையும் கொடுப்பார்கள். இதனால் நாம் கொடுக்கும் தங்க நகையில் பழைய அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு செய்வது நமக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தும். இதை தவிர்க்க நாம் வீட்டிலேயே நகைகளை கழுவி புதிது போல மாற்றலாம்.
இதையும் படிங்க: வாரத்தின் இந்த 4 நாட்களில் தங்கம் வாங்குங்க.. அதிர்ஷ்டம் டபுளா கிடைக்குமாம்!
தங்க நகைகளை புதிது போல மாற்ற வீட்டில் உள்ள இரண்டு பொருள்களைப் போதும். மஞ்சள் தூளும் பல்பொடியும் தான் அந்தப் பொருள்கள். இவை இரண்டும் இருந்தாலே தங்க நகைகள் மீது படிந்திருக்கும் மங்கிய தோற்றத்தை நாம் மாற்ற முடியும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் இறக்கிவிடுங்கள். இந்த தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து விட்டு அதனுடன் கோல்கேட் பல்பொடி ஒரு ஸ்பூன் போட்டு கலக்கி கொள்ளுங்கள். நன்றாக கலந்து விட்ட பிறகு அழுக்கு படிந்த மஞ்சிய தோற்றத்தில் இருக்கும் தங்க நகைகளை அதனுள் போட வேண்டும். சுமார் 10 நிமிடங்களாவது நகைகள் தண்ணீரில் ஊற வேண்டும். அதன் பிறகு மற்றொரு தட்டில் ஒரு ஸ்பூன் பல்பொடி போட்டு வையுங்கள். இந்த பல்பொடியை ஒரு பழைய டூத் பிரஷ்ஷில் தொட்டு ஏற்கனவே ஊறவிட்ட நகைகளை எடுத்து நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: வீட்டில் தங்கத்தை எந்த இடத்தில் வைத்தால் அள்ள அள்ள பெருகும்.. வாஸ்து டிப்ஸ் இதோ!!
நகைகளை பளபளக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடினமாக தேய்த்து விடாதீர்கள். மெதுவாக நகைகளை தேய்த்து, தொடர்ந்து மூன்று முறை தண்ணீரில் கழுவி எடுங்கள். பின்னர் காட்டன் துணியால் நன்கு துடைத்து உலர்ந்த நிலையில் நகைகளை வைக்க வேண்டும். இப்போது நிச்சயம் உங்களுடைய நகைகளில் மாற்றம் தெரியும். அழுக்குகள் நீங்கி, அதன் மங்கிய தோற்றம் மாறி பளபளப்பாக இருக்கும். ஏதேனும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன்பு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இப்படி சுத்தம் செய்வதால் தங்க நகைகள் ஜொலிஜொலிப்பான தோற்றத்தை பெறும். முயன்று பாருங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D