இதுதான் உலகின் விலையுயர்ந்த தக்காளி விதை .. ஒரு கிலோ ரூ.3 கோடியாம்!

Published : Jul 05, 2023, 10:44 AM ISTUpdated : Jul 05, 2023, 10:47 AM IST
இதுதான் உலகின் விலையுயர்ந்த தக்காளி விதை .. ஒரு கிலோ ரூ.3 கோடியாம்!

சுருக்கம்

தங்கத்தை விட அதிக விலை கொண்ட தக்காளி விதைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 200% விலை அதிகரித்து தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 160 வரை விற்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சரி, இதுஒருபுறமிருக்கட்டும், தங்கத்தை விட அதிக விலை கொண்ட தக்காளி விதைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம். இந்த தக்காளி விதைகளின் ஒரு கிலோ பாக்கெட்டின் விலை சுமார் 3 கோடி ரூபாய். அந்தத் தொகையைக் கொண்டு ஐந்து கிலோ தங்கத்தை எளிதாக வாங்கலாம். Hazera Genetics என்ற நிறுவனம் இந்த தக்காளி விதைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த தக்காளி விதைகளுக்கு ஐரோப்பிய சந்தையில் அதிக தேவை உள்ளது.

உலகின் மிகவும் விலை உயர்ந்த வோட்கா இதுதான்.. நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை.. எவ்வளவு தெரியுமா?

இந்த குறிப்பிட்ட தக்காளி வகையின் ஒவ்வொரு விதையிலும் இருபது கிலோ வரை தக்காளி விளையுமாம். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த தக்காள விதையற்றது, விவசாயிகள் ஒவ்வொரு பயிருக்கும் புதிய விதைகளை வாங்க வேண்டும். அதிக விலை இருந்தபோதிலும், இந்த தக்காளி அவற்றின் தனித்துவமான சுவைக்காக அறியப்படுகிறது. யாராவது இந்த தக்காளியின் சுவையை ஒருமுறை அனுபவித்தாலே, தொடர்ந்து அந்த தக்காளியை சாப்பிட விரும்புவார்களாம்.

Hazera Genetics நிறுவனம், ஆராய்ச்சி, உற்பத்தி, செயலாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றில் அதன் செயல்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. ஹஸேராவின் பிரதிநிதியான Tyrrel, புதிய ரகங்களை இனப்பெருக்கம் செய்வதிலும், விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு விதைகளை உற்பத்தி செய்வதிலும் தங்கள் கவனம் செலுத்துவதாக விளக்கினார். விதை உற்பத்தி நிலைக்குப் பிறகு, விதைகள் தேவையான வணிகத் தரங்களைச் சந்திக்கின்றனவா என்பதை உறுதிசெய்ய முழுமையான தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளை நடத்துகின்றனர். விதைகள் இந்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றவுடன், உயர்தர விதைகளை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்க செயலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1 கிலோ ரூ.20 லட்சம்! இந்த ‘ இமயமலை வயகரா’ பற்றி தெரியுமா? அப்படி என்ன ஸ்பெஷல்?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்