Shani Horoscope: ஜோதிடத்தின் படி, இந்த ஏப்ரல் மாதத்தில், கிட்டத்தட்ட 9 கோள்களும் வேறு ராசிகளுக்கு இடம் பெயர்வதால் இது மிகப்பெரிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, இந்த ஏப்ரல் மாதத்தில், கிட்டத்தட்ட 9 கோள்களும் வேறு ராசிகளுக்கு இடம் பெயர்வதால் இது மிகப்பெரிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
ஏழரை நாட்டு சனி:
இந்த மாதம் நிகழவிருக்கும் 2022 ஏப்ரல் 29 ம் தேதி நடைபெறும், சனியின் பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோன்று, இந்த வேளையில் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
கிரகங்களின் மாற்றம் ஏற்படும் போது எல்லாம், அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். ஆனால், ஏப்ரல் மாதத்தில் 9 கிரகங்களுக்கு ராசி மாறுவதால் பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.இதில் சனி, குரு, ராகு -கேது, சுக்கிரன், சூரியன் ஆகியவை அடங்கும்.
மிதுனம்:
இந்த மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த 9 கிரகங்களில் பெயர்ச்சியானது, மிதுன ராசிக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும். இதனுடன், சில பெரிய லாபத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும்.தொட்டது துலங்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரகங்களின் ராசி மாற்றம் சிறப்பானதாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். திருமண யோகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் ராசி மாற்றங்கள் சிறப்பான பலனைத் தரும். சுயதொழிலில் பன்மடங்கு லாபம் காண இருக்கிறீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவந்து சேரும். பணியிடத்தில் மரியாதையும் கெளரவமும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்காளாக கிடப்பில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். சனிபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி கும்ப ராசிக்கு பிரவேசிப்பதால் பலன் கிடைக்கும். இந்த மாதம் நிதி நிலைமை வலுவாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வெளியிட பேச்சுவார்த்தையில் கவனம் தேவை.
மீனம்:
இந்த மாதம், தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும். உங்களுக்கு குருவின் ராசி மாற்றத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்கலாம். விட்டுச்சென்ற உறவு உங்களை தேடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.