
ஏப்ரல் மாதங்களில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், சிலருக்கு சுபமாக இருக்கும். சிலருக்கு அசுபமாக இருக்கும். ஜோதிடத்தின் படி, இந்த வாரம் முழுவதும் சில ராசிகர்களுக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுகிறது. அப்படியாக இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் உறவினர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற வீண் குழப்பம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட கூடாது. சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து சேரும். லாபம் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாக இழுபறியில் போட்டு வைத்திருக்கும் வேலைகளை முடிவடையும். பண வரவு உண்டு.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத வருமானம் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்து நீண்ட நாட்களுக்குப் பின், நீண்ட போராட்டத்திற்குப் பின் உங்கள் கை வந்து சேரும். உங்களின் மதிப்பு, மரியாதை கூடும்.
சிம்மம்:
இந்த வாரம் பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும். பண வரவு திருப்தி கரமாக இருக்கும். மேலும், பெண்கள் சமையலறையில் சமைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். ஏதாவது காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கன்னி:
மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும். மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். புதிதாக சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் உள்ளது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த வார இறுதியில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டாகும்.
துலாம்:
நவீன ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். காசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற மனக் குழப்பத்தோடு எந்த ஒரு புதிய முடிவுகளை எடுக்காதீர்கள். நல்ல விஷயங்கள் செய்வதை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம், குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி காணப்படும். புதிய சொத்து வாங்க கூடிய யோகம் உள்ளது. புதிய முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். இந்த வார இறுதியில் உடல்நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தனுசு:
இந்த வாரம் முழுவதும், தனுசு ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். புதியதாக சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகள் கூட தேடி வரும். அரசு தொடர்பான காரியங்கள் சாதமாக இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். எதிலும் அவசரப்படாதீர்கள். பண வரவு அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்:
கணவன் -மனைவிக்குள் பிரச்சனைகள் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்கள் தக்க சமயத்தில் பண உதவி செய்வார்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செய்யும் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். அதே சமயம் சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.