
நீதியின் கடவுளான சனி பகவான் தனது அருளைப் மழையை பொழியத் தொடங்கிவிட்டால், அவர் அதை நிறுத்தவும் மாட்டார். அப்படியாக சனி பகவானின் அருள் பெறும் 4 ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவக்கிரங்களிலேயே சனிபகவான் நீதியின் கிரகமாக கருதப்படுகிறார். மற்ற கிரகங்களை ஒப்பிடுகையில் மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, தனது ராசியை மாற்றிவிடுகிறது. இறுதியில், சனி பகவான் 12 ராசிகளை சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும்.
சனி பகவானின் பெயர்ச்சி 2022:
சனி பகவானின் பெயர்ச்சி 2022 ஏப்ரல் 29 ம் தேதி நடைபெறும். சனியில் இந்த பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றது. அதேபோன்று, இந்த வேளையில் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஆனால், அதன் முதல் கட்டம் மீன ராசிக்காரர்களிடம் தான் தொடங்கும். இதேபோல், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனி தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள். எனவே, இந்த நேரத்தில் இந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், சனி பகவான் தனது அருளைப் பொழியத் தொடங்கிவிட்டால், அவர் அதை நிறுத்தவும் மாட்டார். அப்படியாக சனி பகவானின் அருள் பெறும் 4 ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முழுமை பெற ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் அதிக பணவரவு, பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் போக கூடும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்:
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசிக்காரர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். விரும்பிய வேலை கிடைக்கும். சனி பகவானின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித் தரும். உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் பல்வேறு வழிகளில் நன்மை வந்து சேரும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கும். வீடு, நிலம், சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். பண உயர்வு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்:
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். இதுவரை தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் தொடங்கும். நீண்ட பயணம் செல்லலாம். நோய் தொல்லையில் இருந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.