Horoscope : குரு பகவானின் ராசி மாற்றம்...இந்த 5 ராசிகர்களுக்கு பண மழை பொழியும்..! இன்றைய ராசி பலன்..!

By Anu Kan  |  First Published Apr 2, 2022, 7:44 AM IST

Rasi Palan Today: தேவர்களின் குருவான வியாழனின் ராசி மாற்றத்தால், இந்த 5 ராசிகர்களுக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகிறது. 


தேவர்களின் குருவான வியாழனின் ராசி மாற்றத்தால், இந்த 5 ராசிகர்களுக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகிறது. 

ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது.

Latest Videos

வியாழன்  கிரகம், தைரியம், ஆற்றல், நிலம், திருமணம் ஆகியவற்றுக்கு சிறந்து விளங்குகிறது. தேவர்களின் குருவான வியாழன் ஏப்ரல் 12ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். அவர், ஏப்ரல் 11 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீனத்திற்குள் நுழைவார். வியாழனின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்.  சிலருக்கு இது மகிழ்ச்சியை தரும். சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும் யார் யாருக்கு என்னென்னெ பலன் என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம் மிகுந்த சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட பணிகளில் வெற்றி கிடைக்கும். வீடு மனை, வாங்கும் யோகம் பிறகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன் அடைவார்கள்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றத்தால், திடீர் பணவரவு உண்டாகும். நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் பதவி உயர்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் போகலாம். திருமண யோகம் கிடைக்கும். பணி இடத்தில் அதிக கவுரமும், நல்ல பெயரும், ஊதிய உயர்வும் கிடைக்கும். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், மிகவும் நல்லதாக உள்ளது. இவர்களுக்கு குருவின் அருளால் இதுவரை தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பணியிடத்திலும் வீட்டிலும் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த மாற்றம் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.  போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பல வெற்றிகளை காண்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

துலாம்:

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.  சொத்து, புது வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். துலா ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பணியிடத்தில் உழைப்பு அதிகரிக்கும். தயார் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிலும், பொறுமையாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க...Chaitra Horoscope: சைத்ர நவராத்திரி இன்று ஆரம்பம்..துர்க்கை அம்மனின் அருள் பெறும் 6 ராசிகள்! இன்றைய ராசி பலன்!

click me!