Chaitra Horoscope: சைத்ர நவராத்திரி இன்று ஆரம்பம்..துர்க்கை அம்மனின் அருள் பெறும் 6 ராசிகள்! இன்றைய ராசி பலன்!

By Anu Kan  |  First Published Apr 2, 2022, 7:13 AM IST

Chaitra Horoscope: சைத்ர நவராத்திரி காலத்தில், சனியும் செவ்வாயும் மகர ராசியில் சஞ்சரம் இந்த ராசி மாற்றம் சிலருக்கும் சுபமாகவும், சிலருக்கும் அசுபமாகவும் இருக்கும். யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 


சைத்ர நவராத்திரி காலத்தில், சனியும் செவ்வாயும் மகர ராசியில் சஞ்சரம் இந்த ராசி மாற்றம் சிலருக்கும் சுபமாகவும், சிலருக்கும் அசுபமாகவும் இருக்கும். யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

இந்த 2022 ஆம் ஆண்டு சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 11 வரை 9 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களில் துர்க்கை அம்மனின் அருள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும். இந்த நாளில், முக்கிய இரண்டு ராசிகளான, சனியும்-செவ்வாயும் மகர ராசியில் சஞ்சரிக்கின்றனர். இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்பதால் ஒரே ராசியில்  இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். யாருக்கு ஆதாயம் யார் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Latest Videos

மேஷம்:

துர்க்கை அம்மனின் அருளால், ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். பணம் சாதகமாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க இது மிகவும் சாதகமான நேரம். அரசியலுக்கு வர விரும்புவோருக்கு இந்த நேரம் சிறப்பானது.

மகரம்:

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு துர்க்கை அம்மனின் அருளால், இந்த நாட்களில் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது எனவே மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்:

கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய சிறு சிறு விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி அன்பில் அக்கறை தேவை.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு துர்க்கை அம்மனின் அருளால், இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகமாக சுமக்க கூடிய சூழ்நிலையில் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. 

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு உத்வேகத்தையும் காண்பிப்பீர்கள். விடாமுயற்சி வெற்றியை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களிலிருந்து அனுகூலமான பலன்கள் கிடைக்க போகிறது.

மேலும் படிக்க ...Horoscope Today: செவ்வாயின் ராசி மாற்றம்...யாருக்கு நன்மை...? யாருக்கு ஆபத்து..? இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

click me!