
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
அன்பு, அழகு, ஆரோக்கியம், நிதி நிலை உயர்வு, மகிழ்ச்சி ஆகியவற்றை தருபவரான சுக்கிரன் மார்ச் 31 அன்று சனியின் ராசியான கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதையடுத்து, அவர் ஏப்ரல் 28 வரை கும்ப ராசியில் சஞ்சாரிக்க உள்ளார்.
சனி பகவான் கும்ப ராசிக்கு அதிபதியாவார். அதில் சுக்கிரன் பிரவேசம் செய்வது முக்கிய நிகழ்வாகும். சுக்கிரனின் இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களிலும் காணப்படும். சிலருக்கு அசுபமாக இருக்கும். ஆனால், சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அளப்பறிய நன்மைகளை அள்ளி தருகிறது.
ஜோதிடத்தின் படி, சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே இந்த பெயர்ச்சி உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேஷம்:
உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரித்துள்ளார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கூடும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். தொழில், வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக அமையும். இது தவிர வியாபாரத்தில் தொடர் வளர்ச்சி இருக்கும். இந்த கால கட்டத்தில் எந்த வேலை செய்தாலும் பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 12ம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இந்த நேரத்தில், உங்களுக்கு நல்ல பணம் லாபமாக கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறலாம். மேலும், கூட்டாண்மையின் மிகப்பெரிய பலனைப் பெறலாம்.
மகரம்:
சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் சஞ்சரித்துள்ளார். செல்வம், குடும்பம் மற்றும் பேச்சு ஸ்தானம் என்று அழைக்கப்படும் சுக்கிரன் அருள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வணிகத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம்,
கும்பம்:
உங்கள் ராசிக்கு சுக்கிரன் லக்ன வீட்டில் சஞ்சரித்துள்ளார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். கும்பம் சனி பகவானல் ஆளப்படுகிறது மற்றும் சுக்கிரனுடனான நட்பின் உணர்வின் காரணமாக, இந்த மாற்றம் நல்லதாக இருக்கும்.
சிம்மம்:
சுக்கிரனின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால், கூட்டுத் தொழிலில் அபரிமிதமான பண லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உங்களுடன் நட்புடன் பழகுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.