Rahu ketu peyarchi 2022: ராகு, கேது பெயர்ச்சி இந்த 5 ராசிகளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ராகு, கேது பெயர்ச்சி இந்த 5 ராசிகளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி:
ஜோதிடத்தின் படி, நிழல் கிரகமான ராகு மேஷ ராசிக்கு, 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி இடம் மாறுகிறார். சுமார் 18 1/2 ஆண்டுகளுக்கு பிறகு ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். தீய கிரகமாக கருதப்படும் ராகு, இந்த மேஷ ராசியில் சுமார் 1 1/2 ஆண்டுகள் தங்கி இருப்பார்.
கேது பெயர்ச்சி:
அதேபோன்று, மற்றொரு நிழல் கிரகமான கேது துலாம் ராசிக்கு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி இடம் மாறுகிறார். தற்போது விருச்சிக ராசியில் கேது பயணித்து வரும் கேது, துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். நிழல் கிரகமான கேது ஒரு மர்மமான கிரகமாக கருதப்படுகிறது. இதன் பலன்கள் யார் யாருக்கு நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ரிஷபம் :
ஜோதிட சாஸ்திரப்படி இந்த வாரம் முழுவதும் ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த நேரத்தில், குருவின் பயணம் லாப ஸ்தானத்திற்கு வருவதால் இதுவரை வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில், இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் நீங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்குஇந்த வாரம் நன்மையாக இருக்கும். உத்யோகத்தில் உயர்ந்த பதவி உண்டாகும். அரசு வேலையில் இருப்போர்க்கு இடம்பெயர்வு நடைபெறும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண யோகம் கூடி வரும். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். எதிலும், துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
மகரம்:
மகரம் ராசிகர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமாக இருக்கும். உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை தரும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். உங்களுடைய திறமையை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கான ஏற்ற காலம் இதுவாகும்.
கும்பம்:
புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுனம் ராசியினர் இந்த வாரம் முழுவதும் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பணியிடத்தில் கடின உழைப்பு அதிகம் தேவை.தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும், பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.