
ஜோதிட சாஸ்திரப்படி சனி மிக மெதுவாக நகரும் கிரகம் ஆகும். சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். சனி தற்போது மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் பெயர்ச்சி ஆக உள்ளார்.
ஏழரை நாட்டு சனி:
இதன் பலன் எல்லா ராசிக்காரர்களுக்கும் இருக்கும், ஆனால் ஒரு ராசிக்காரர்கள் தான் அதிகம் அதாவது ஏழரை வருடங்கள் பாதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 29-ம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தவுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும். மறுபுறம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இது தவிர, வேறு சில ராசிகளும் உள்ளன, அவை ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் பலனை பெறுவார்கள்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக எந்த ராசியெல்லாம் நற்பலன்களை மற்றும் தீமைகளை பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இதனால், தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை நடந்த அத்தனை கஷ்டங்களும், துன்பங்களும் தீரும். ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் உங்களுக்கு ஏழரை சனி முடிவடைய இருப்பதால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.
விருச்சகம்:
இந்த சனி பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் பெயர்ச்சியாக இருக்கும். நீங்கள் தொடங்க இருக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவுகள் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மனதில் இருந்த அழுத்தங்கள் நீங்கி புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
மீனம்:
ஏப்ரல் 29 ஆம் தேதி முதல், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும். இதனால், நீங்கள் உறவு சிக்கல்களையும், பண ரீதியான பாதிப்புகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். இவர்களுக்கு மனம் குழப்பமாக இருக்கும். எனவே, நீங்கள் இந்த சமயத்தில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பது மிகவும் நல்லது. இந்த ராசிகார்கள் தவிர, வேறு சில ராசிகளும் உள்ளன, அவை ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் பலனை பெறுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.