
ராகு மற்றும் கேது கிரகம் ஒவ்வொரு ராசியிலும், ஒன்றரை மாதங்கள் தங்கி பலன்களை தருகின்றனர். பஞ்சாங்கத்தின் படி, பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு, கேது பெயர்ச்சி 18 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது.
ராகு - கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள் தங்கி அந்த ராசிக்குரிய அதிபதி கொடுக்கக்கூடிய பலனை அளிப்பார்கள். கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த இடப்பெயர்ச்சி, எந்த ராசிகளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் ராசி மாற்றம் செல்வம் செழிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் வெற்றி உண்டாகும். வியாபாரம் செய்யும் துலா ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம். எல்லா விஷயங்களிலும் சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது.வெளியூர் பயணம் செல்லும் யோகம் உண்டாகு
கன்னி:
உத்தியோகத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வம் பெருக வாய்ப்புகள் அதிகம். உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். புத்தாண்டில் கவனமாக இருங்கள். குறிப்பாக பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
ராகு-கேதுவின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. வருமானம் அதிகமாகவே இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் மற்றும் யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.
துலாம்:
தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் குடும்பத்தில் பதற்றமான சூழல் நிலவும். இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டு மூலங்கள் மூலம் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு வருமானத்தை கொண்டு சேர்க்கும். சொத்து சம்பந்தமான பல விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இது தவிர, குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தினசரி வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். தாய்வழியில் இருந்து விரும்பத்தகாத செய்திகள் கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.