Guru Peyarchi horoscope: குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்...எந்ததெந்த ராசிகள் தெரியுமா..?

Anija Kannan   | Asianet News
Published : Apr 10, 2022, 06:00 AM IST
Guru Peyarchi horoscope: குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்...எந்ததெந்த ராசிகள் தெரியுமா..?

சுருக்கம்

Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் ராசி மாறும் போது, அது அனைத்து ராசிக்காரர்களையும் நேரடியாக பாதிக்கிறது. கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் பல சுபம் மற்றும் அசுப மாற்றங்களைக் கொண்டு வருகிறது

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் ராசி மாறும் போது, அது அனைத்து ராசிக்காரர்களையும் நேரடியாக பாதிக்கிறது. கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் பல சுபம் மற்றும் அசுப மாற்றங்களைக் கொண்டு வருகிறது. 

குரு பெயர்ச்சி:

வேத ஜோதிடத்தின் படி, குரு பெயர்ச்சி காலம், சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். முக்கியமாக கூட்டு வணிகம் செய்யும் நபர்களுக்கு, இந்த நேரத்தில், நீங்கள் சில நல்ல வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். மேலும், வணிகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதன்படி, மார்ச் 23 ஆம் தேதி தேவகுரு வியாழன் உதயமாக உள்ளார். குரு பகவான் தன்னுடைய சொந்த வீடான மீன ராசியில் அமர்ந்து ஓராண்டு காலம் பயணிக்க இருக்கிறார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதற்கு ஓராண்டு காலம் தேவை.  குரு இருக்கும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடத்திற்கு யோகம் பெருகும்.

அப்படியாக, குரு பகவானின் உதயத்தின் பலன், எந்தெந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கப் போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:

உங்கள் ராசியிலிருந்து  குரு பகவான் 10-வது இடத்தில் பயணிக்கிறார். சுயமாக தொழில் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குருவின் பார்வை நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும்.

கடகம்:

உங்கள் ராசியில் குரு 9-ஆம் இடமான மீன ராசியில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை 3, 5 ஆகிய இடங்களில் இருப்பதால் உடன் பிறந்த சகோதரர் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கையில் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள், நீங்கள் யோகம் பெறுவீர்கள். குரு பெயர்ச்சி உங்களுக்கு இழந்த பொருள், பணம், செல்வம் போன்றவற்றை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்கும் என்பதால் அயராது உழைக்க வேண்டும். 

கும்பம்:

குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுகிறார். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பண பிரச்சனை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.  வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நீண்ட நாள் பிரச்சனை சரியாகும். உழைப்பின் பலன் உங்களுக்கு கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்

மேலும் படிக்க ....Shani Horoscope: அர்த்தாஷ்ட சனியின் பார்வையில் இருந்து தப்பித்து, பிழைக்கும் 4 ராசிகள்...இன்றைய ராசி பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்