Horoscope: குரு பெயர்ச்சியும், தமிழ் புத்தாண்டும் ஒரே நாளில்...அருள் பெரும் ராசிகள்!ஆபத்தை சந்திக்கும் ராசிகள்

Anija Kannan   | Asianet News
Published : Apr 11, 2022, 05:00 AM IST
Horoscope: குரு பெயர்ச்சியும், தமிழ் புத்தாண்டும் ஒரே நாளில்...அருள் பெரும் ராசிகள்!ஆபத்தை சந்திக்கும் ராசிகள்

சுருக்கம்

Horoscope: ஏப்ரல் 14ம் தேதி நிகழும் தமிழ் சுபகிருது புத்தாண்டு ஒட்டி இந்த குரு பெயர்ச்சி நிகழ்ந்திருப்பதால், தமிழ்ப் புத்தாண்டில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

குரு பெயர்ச்சி 2022 :

நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இப்பெயர்ச்சியின் ஒரு சிறப்பு என்னவென்றால் குரு பகவான் தான் ஆளும் மீன ராசிக்கு செல்வது தான். இந்த குரு பெயர்ச்சியால் தனுசு மற்றும் மீன ராசிக்காரரகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 14ம் தேதி நிகழும் தமிழ் சுபகிருது புத்தாண்டு ஒட்டி இந்த குரு பெயர்ச்சி நிகழ்ந்திருப்பதால், தமிழ்ப் புத்தாண்டில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்: 

மேஷ ராசிக்கு கடந்த குரு பெயர்ச்சியின் போது குரு 11ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். கடன் பிரச்சனைகளை தீர்க்க வழி பிறக்கும். சிலர், வாகனம் வாங்குவீர்கள்.  உங்களுடைய பலநாள் முயற்சியினால் சுப பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சி 10 ம் இடத்தில் உள்ளது. தொட்டதெல்லாம் துலங்கும். சகோதர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியம் மேம்படும். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு 9 ம் இடத்தில்  குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். ஆடை, ஆபகரணங்களை வாங்குவீர்கள். அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்கள் யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த நாள் நன்மை தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தைரியமாக செயல்படுத்துவார்கள். 

சிம்மம்: 

பணம் ஒருபுறம் வந்தாலும் செலவுகள் வரும். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாதீர்கள். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குநல்ல மாற்றம் உண்டாகும்.  

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு, எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்களை தீட்டுவீர்கள். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். வெற்றி  பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். இந்த நாள் உங்களுடைய பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில்  முன்னேற்றம் காணப்படும்.

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பதவி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும். தேவையற்ற முன் கோபங்களை கட்டுப்படுத்துவது நல்லது. இந்த ஒரு முக்கிய முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 
இந்த நாள் அதிரடியான திடீர் திருப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும். 

தனுசு: 

தனுஷில் பிறந்தவர்களுக்கு வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனம் தேவை. ஒரே நேரத்தி பல வேலைகளை பார்க்க வேண்டி இருக்கும். எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். 

மகரம்: 

போராடி வெற்றி பெரும் சக்தி கிடைக்கும். மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவ அறிவு பல அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நவீன உத்திகள் கையாளும் திறன் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். 

மீனம்: 

பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய பலம் தெரிய ஆரம்பிக்கும்.  விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மேலும் படிக்க ....Horoscope: 18 ஆண்டுகளுக்கு பிறகு துலாமுக்கு செல்லும்.... கேது பெயர்ச்சியால் என்னனென்ன நன்மைகள் நடக்கும்..?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!