Love Horoscope: ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்கார நபர்கள் தங்கள் திருமணத்திற்கு பிறகு எதையும், தியாகம் செய்யும் அளவிற்கு இருப்பார்களாம். அவர்கள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்கும், ஒவ்வொரு விதமான குண அதிசயங்கள் உள்ளது. அவர்களின் உள்ள நல்ல மற்றும் தீய குணங்கள் மற்றும் இயல்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. திருமணத்திற்கு தயாராகும் பெண்கள், ஆண்கள் தங்கள் துணை எப்படி இருப்பார்களோ என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும். அப்படியாக இந்த ராசி கொண்ட நபர்கள் திருமணத்திற்கு முன்பு பல்வேறு இழிவான செயல்களில் ஈடுபட்டாலும், திருமணத்திற்கு பிறகு அவற்றை விட்டு விட்டு தங்கள் துணையை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களாம். யார் யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசி கொண்ட நபர்கள் தங்கள் துணையை எப்போதும் சுற்றி சுற்றி வருவார்கள். ஒருவேளை, இவர்கள் திருமணத்திற்கு முன்பு உறவில் இருந்தால், அதனை நிறுத்து கொள்வார்கள். ஏனெனில். இவர்கள் தங்கள் துணைக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். மிகவும் சிறந்து விளங்கும் இவர்களை பாசத்தில் அடித்துக்கொள்ளவே முடியாதாம். ஆம் அந்த அளவிற்கு உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் அதிக அக்கறையுடன் செயல்படுவார்களாம்.
மகரம்:
மகரம் ராசி கொண்ட நபர்கள் தங்கள் துணையை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களாம். குடும்பம், கடமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்து விளங்குவார்களாம். திருமணத்திற்கு முன்பு உறவில் இருந்தால், அதனை விட்டு விடுவார்கள். இவர்கள் தங்கள் துணைக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். அனைத்து செயல்களிலும் மிகவும் சிறந்து விளங்கும் இவர்களை பாசத்தில் அடித்துக்கொள்ளவே முடியாதாம்.மேலும், உங்கள் முன்னேற்றத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
துலாம்:
மிகவும் துடிப்பாகவும், அதிக அக்கறையுடனும் இருக்கும் இவர்கள் தங்களது துணையையே திகைக்க வைக்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்ய விரும்பினால் துலாம் ராசிகொண்ட நபரை வாழ்கை துணையாக தெரிவு செய்யலாம். ஒருவேளை திருமணத்திற்கு முன்பு அப்படி, இப்படி இருந்தாலும் அதனை கட்டாயம் விட்டுவிடுவார்களாம்.
மீனம்:
இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும், துணைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நேர்மறையான சிந்தனை அதிகமாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் பாஸிட்டிவாக இருப்பார்கள் இவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் துணைக்கு, உறுதுணையாக நின்று அவர்களை வழிநடத்துவார்கள். திருமணத்திற்கு முன்பு உறவில் இருந்தால், மனைவியின் பாசத்தாலும், வசீகரத்தாலும் விட்டு விட்டுவிடுவார்களாம்.