Budhan Peyarchi 2022: ஜூலை 2 ஆம் தேதி புதன் பெயர்ச்சியால்...குபேரனின் அருள் முழுமையாக பெறும் மூன்று ராசிகள்...
Budhan Peyarchi 2022 Palangal: புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன், ஜூலை 2 ஆம் தேதி மிதுனம் ராசியில் நுழைவார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அனுகூலமான பலன் இருக்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
budhan peyarchi 2022
ஜூலை 2 ஆம் தேதி புதன் பெயர்ச்சி 2022:
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை 2 ஆம் தேதி, புத்தி, பேச்சு, செல்வம், பெருமை, திருமண வாழ்க்கையின் காரணியான புதன் கிரகம் மிதுனம் ராசியில் நுழையும். புதனின் ராசியில் ஏற்படும் மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். புதன் 68 நாட்கள் மிதுன ராசியில் இருப்பார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கியம் மேம்படும். இந்த கிரகப் பெயர்ச்சியால் அடுத்த மாதம் முழுதும் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. மேலும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
budhan peyarchi 2022
மிதுனம்:
ஜூலை மாத தொடக்கத்தில் சூரிய பகவான் இந்த ராசியில் அமர்ந்திருக்கிறார். மேலும், ஜூலை 2ம் தேதி புதன் கிரகம், மிதுனம் ராசிக்குள் நுழைகிறார். இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு, நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். தொழிலில் லாபம் கூடும். கணவன்- மனைவி உறவு வலுப்படும்.
budhan peyarchi 2022
கடகம்:
கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறது.கடகம் ராசிக்காரர்களுக்கு மரியாதை கூடும். இத்துடன் செல்வ குபேரின் அருளும் கிடைக்கும். நீங்கள் தொடங்கும். வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மேலும், ஜூலை 28-ம் தேதி மாத இறுதியில், கடகத்தில் வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியும் இந்த ராசிக்கு சுப பலன்களைத் தரும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
budhan peyarchi 2022
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை 2ம் தேதி சிறப்பானதாக இருக்கப் போகிறது. ஜூலை மாதம் பல பெரிய கிரகங்கள் தங்கள் நிலை மாறி தனுசு ராசிக்குள் நுழையும். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, சூரியன் இந்த ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக வழியில் பண லாபம் உண்டாகும். மேலும், புதனின் தாக்கமும் இந்த ராசியில் தெளிவாக இருக்கும்.நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.