Gastric problem: சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாதபோது அதிலிருக்கும் பேக்டீரியாக்காளால் வயிற்றில் கேஸ் சேரும். எனவே, உடலில் கேஸ் சேருவதை தவிர்க்கும் சில வீட்டு வைத்திய குறிப்புகள் என்னென்னெ என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாதபோது அதிலிருக்கும் பேக்டீரியாக்காளால் வயிற்றில் கேஸ் சேரும். மேற்கத்திய உணவு முறை, ஒரே இடத்தில நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் இருப்பது போன்றவை முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, உடலில் கேஸ் சேருவதை தவிர்க்கும் சில வீட்டு வைத்திய குறிப்புகள் என்னென்னெ என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
undefined
வயிற்றில் கேஸ் சேர என்ன காரணம்? :
வயிற்றில் வாயு தங்க இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாத போது அதிலிருக்கும் பேக்டீரியாக்களால் வயிற்றில் கேஸ் சேரும். அதே போல உணவு செரிக்கப்படும் போது வேதி வினையிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக் சைடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் வயிற்றினுள் தங்கி விடுகின்றன. இதனால் வயிற்றுக்குள் அசெளகரியம் ஏற்படுகிறது.
என்ன செய்யலாம்..? என்ன செய்ய கூடாது..?
எளிதில் ஜீரணம் ஆகாத, பீன்ஸ், முட்டை கோஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை மற்றும் இனிப்பு கலந்த ஜூஸ் வகைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். அதேபோன்று, நீராகாரம் நிறைந்த சூப், கஞ்சி போன்று எளிதில் ஜீரணம் ஆககூடியவற்றை குடியுங்கள்.
ஒரு வேளை, செரிமானம் ஆகாமல் வயிற்றில் கேஸ் செறிந்து விட்டால், முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையை மேல் நோக்கி உயர்த்தி, உங்கள் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். குறிப்பாக, கட்டில்,சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்திடுங்கள்.
கேஸ் சேருவதை தவிர்க்கும் 5 உணவு பொருட்கள்:
சீரகத் தண்ணீர்:
சீரகத் தண்ணீர் வாயுத் தொல்லையைப் போக்க சிறந்த மருந்து.1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை 2 கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இதை அப்படியே குடிக்கலாம் அல்லது இதனோடு சிறிது புதினா இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.நல்ல பலன் கிடைக்கும்.
சூடான பானம் :
சூடான பானங்களை குடியுங்கள்டீ, காபி, க்ரீன் டீ போன்றவை குடிக்கலாம். இஞ்சி சாறு, இஞ்சி தேநீர் போன்றவற்றையும் குடிக்கலாம். இப்படி இஞ்சி டீ குடித்து வரும் போது வாயுத் தொல்லை நீங்கி விடும். இஞ்சி இயற்கையாகவே வாயு விரட்டியாக செயல்படுகிறது
பூண்டு:
உணவு ஜீரணத்திற்கும் பூண்டு பெரும் பங்காற்றும். இரண்டு மூன்று பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடியுங்கள்.இதனாலும் வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்க முடியும் .
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து கொள்ளுங்கள் அதனை பாலில் கலந்து கூட குடிக்கலாம். இது உடனடி நிவாரணத்திற்கு கை கொடுக்கும். வாயு தொல்லையை சரி செய்யும்.
பெருங்காயம்:
வாயுவை போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம். இது குடலில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாகுவதைத் தடுத்து வாயுவை வெளியேற்றுகிறது. நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி குடிக்கலாம். இருப்பினும், அதிகமாக குடித்தால் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். எனவே, அளவோடு குடிப்பது நல்லது.