Pregnancy Symptoms: ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் வெவ்வேறுவிதமாக இருக்கும். அப்படியாக, மாதவிடாய் தள்ளிப்போன பிறகு நீங்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டறியும் ஆரம்ப கால,அறிகுறிகள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
தாய்மையின் உணர்வை நாம் அறியும் முன் நம் உடல் அறிந்துவிடும். அவர்களுக்கே தெரியாமல் உடல் குழந்தையைச் சுமப்பதற்குத் தயாராகிவிடும். ஆனால் சில நாட்கள் கழித்தே உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளால் அதைக் கண்டறிய முற்படுவோம். இருப்பினும், ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் வெவ்வேறுவிதமாக இருக்கும். அப்படியாக, மாதவிடாய் தள்ளிப்போன பிறகு ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் ஆரம்ப கால பொதுவான அறிகுறிகள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
மார்பகங்கள் வலி :
கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தான் முதலில் தோன்றும் என்கின்றனர் மருத்துவர்கள். மாதவிடாய் தள்ளிப்போன பிறகு, மார்பகங்கள் கனமாகவும், வீக்கம் ஏற்பட்டதைப் போன்ற வலி ஏற்படும். இந்த அறிகுறியை சிலர் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும் உணர்வார்கள். கர்ப்பம் தரித்திருந்தால் தொடர்ந்து அந்த வலி இருக்கும்.
இரத்தப் போக்கு :
சிலருக்கு வழக்கத்தைக் காட்டிலும் மிகக் குறைவான குறிப்பாக ட்ராப் போன்று இரத்தப் போக்கு ஏற்படும். இதை மாதவிடாய் எனக் கருதிவிடாதீர்கள். ஏனெனில், அந்த இரத்தப் போக்கு ஒன்று, இரண்டு நாட்களில் நின்றுவிடும். அப்படி இருந்தாலும் அதை அலட்சியப் படுத்தாமல் மருத்துவரை அணுகுங்கள்.
மூச்சு திணறல்:
நீண்ட தூரம் உடற்பயிற்சி, கடுமையான வேலை போன்றவற்றில் மூச்சு திணறல் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், ஒருமுறை மாடிப்படி ஏறும் போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுகிறதா? இந்த நிலைமை தொடர்ச்சியாக இருக்கிறதா..? அப்படி என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கலாம்.
உடல் சோர்வு:
நீங்கள் எப்போதும் போல் செய்யும் வேலைகளைத்தான் செய்கிறீர்கள். இருப்பினும் வழக்கத்தை விடவும் அதிகமான சோர்வை உணர்கிறீர்கள் என்றாலும் அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான ஒருவித அறிகுறி ஆகும். இதற்குக் காரணம் உடலில் உள்ள அனைத்து உடல் பாகங்கள் மற்றும் ஹார்மோன்கள் இடைவெளியின்றி வேலைச் செய்கின்றன என்று அர்த்தம். பல பெண்களுக்கு சோர்வு முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் :
நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க பாத்ரூம் செல்கிறீர்கள் என்றால் அது நீங்கள் கர்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் வழக்கத்தை விட இரவிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இதற்குக் காரணம், உங்கள் உடல் வெளிப்படுத்தும் கூடுதல் நீரை வெளியேற்ற ஓய்வின்றி சிறுநீர் பை வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இதனை தவிர்த்து, முதுகு வலி, தலைவலி, வாந்தி வருதல், உடல் எப்போது சூடாக இருத்தல், பின் முதுகு வலி, பசியில்லாமை, அஜீரண கோளாறு, உச்சபட்சமான வாசனை உணர்வு, மூச்சு திணறல் என கர்ப்பத்திற்கு ஆரம்ப அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட்ட ஒரு வாரத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.