Health Tips: நீங்கள் ஜாலியாக செல்லும் சுற்றுலா..வயிறு பிரச்சனைகளால் தடைபடுதா..? தவிர்க்க நச்சுனு நாலு டிப்ஸ்..

By Anu Kan  |  First Published Jun 22, 2022, 2:32 PM IST

Health Tips: பயணங்களின் போது பலரும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலசிக்கல், வாந்தி, குமட்டல், வாயுத் தொல்லை, மற்றும் தலைசுற்றல் எனப் பல தொல்லைகள் ஏற்படும். இதனை தவிர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 


பயணங்களின் போது பலரும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலசிக்கல், வாந்தி, குமட்டல், வாயுத் தொல்லை, மற்றும் தலைசுற்றல் எனப் பல தொல்லைகள் ஏற்படும். குறிப்பாக இது பயணத்தினால் ஏற்படும் ஓர் உடல்நலக்குறைவு என்பதாலேயே இது மோஷன் சிக்னஸ் என்று குறிப்பிடப்படுகிறது. பயணம் போது மூன்றில் ஒருவருக்கு இந்த தற்காலிக உடல்நல கோளாறு ஏற்படுகிறது.இதனை தவிர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Tap to resize

Latest Videos

உறக்கம்:

பயணங்களில் பிரச்சனையை தவிர்க்க முந்தின நாள் நல்ல உறக்கம் அவசியம். உறக்கம் உங்கள் ஆரோக்கியத்தையும் குறிவைத்து தாக்குகிறது. தூக்கமின்மை காரணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். மன அழுத்தம் என்பது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஒரு பேக்கேஜ் ஆகும். எனவே, பயணம் இனிமையாக அமைய நல்ல உறக்கம் ஆகும். 

லெமன் சால்ட்: 

எலுமிச்சை ஜூஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் பயணங்களின் போது ஏற்படும் குமட்டல் உணர்வை தடுக்கலாம். பயணத்தில் எடுத்து சென்றால், குமட்டல் உணர்வு துவங்கிய அடுத்த நொடியே அதை பருகினால் உடனடியாக அந்த உணர்வு கட்டுப்பட்டு விடும்.

புதினா:

பயணத்தின் போதோ அல்லது பயணத்திற்கு முன்போ சில புதினா இலைகளை வாயில் வைத்து மென்று சுவைக்கலாம். புதினாவை மெல்லும் போது, வாசனை மூளைக்கு புத்துயிர் அளிப்பதற்கும், உங்கள் வாய் பகுதியை புத்துணர்ச்சியாக உணர வைப்பதற்கும் பயன்படுகிறது. மேலும் மோஷன் சிக்னஸிலிருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது.

 இதனை தவிர்த்து, அசைவத்தவிர்க்க தவிர்க்கலாம். வயிறு முட்ட சாப்பிடுவதைக் கைவிடலாம். கொழுப்பு உணவுகளை தவிர்த்து அதிக தண்ணீர், பழங்கள், நார்சத்து எடுத்துக்கொள்வது பெரிதும் உதவும்.

 மேலும் படிக்க .....Relationship: உங்கள் இல்லற வாழ்வின் இனிமை கெடுக்கும் 3 பழக்கங்கள்....இனிமேல் இருக்கவே கூடாதாம்...


 

click me!