Relationship: உங்கள் இல்லற வாழ்வின் இனிமை கெடுக்கும் 3 பழக்கங்கள்....இனிமேல் இருக்கவே கூடாதாம்...
Relationship: உங்கள் இல்லற வாழ்வின் இனிமை கெடுக்கும் இந்த 3 பழக்க வழக்கங்களை நீங்கள் கட்டாயம், விட்டுவிட வேண்டும்.
உடலுறவு என்பது தம்பதிகள் இருவருக்கும் இன்பமாக இருத்தல் வேண்டும். ஒருவேளை, ஒருவர் அதனை பாதுகாப்பற்றதாக இருந்தாலும் செக்ஸ் வாழ்கை மட்டுமின்றி இல்லற வாழ்க்கையும் இனிமையாக இருக்காது. தெரியாமல், கூட உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லும் விஷயங்கள் அவர்களை மிகவும் புண்படுத்தும். நீங்கள் அதை உணராமல் இருக்கலாம். உங்களிடையே அதிக விரக்தி, வெறுமை மற்றும் மனச்சோர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், அது குறித்த சில அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, ஆண் -பெண் இருவருக்கும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர், ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து கொள்வது அவசியம். குறிப்பாக, செக்ஸ் தொடர்பான விஷயங்களில் ஒருவருக்கொருவர் புரிதல் அவசியம். எனவே, திருமணத்திற்கு தயாராக உள்ளவர்கள், செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள இருப்பவர்கள் இதுகுறித்த சில விஷயங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உணவு பொருட்கள்:
இன்றைய காலக்கட்டத்தில் பலர் ஜங்க் ஃபுட்களை உண்பதில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். அப்படி, ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட், டிரான்ஸ் ஃபேட்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் சேரும். இதனால் இரத்த ஓட்டம் மிகவும் மெதுவாக செல்லும். அதனால் உடலுறவின் போது உங்களால் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது.
அதிகப்படியான உப்பு:
சிலருக்கு உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அதிகப்படியான உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, லிபிடோவைக் குறைக்கிறது. இதனால் உங்கள் பாலியல் உறவு இனிமையாக இருக்காது.
அதிகப்படியான மன அழுத்தம்:
இன்றைய நவீன காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது அதிகரித்து காணப்படுகிறது.இது, உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமின்றி. இது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் சீர்குலைக்கும். இதனால் இருவரும் உறவில் மகிழ்ச்சியாக செயல்பட முடியாது. எனவே, அதிகப்படியான மன அழுத்தை தவிர்ப்பது நல்லது. இவற்றை தவிர்த்து உங்கள் பாலியல் வாழ்க்கையை இனிதே துவங்குங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்.!