Budhan Peyarchi 2022: ஜூலை வரை புதனின் நேரடி அருள் பெறும் ராசிகள்...தொழில், குடும்பத்தில் ராஜ யோகம்...

Anija Kannan   | Asianet News
Published : May 08, 2022, 07:00 AM IST
Budhan Peyarchi 2022: ஜூலை வரை புதனின் நேரடி அருள் பெறும் ராசிகள்...தொழில், குடும்பத்தில் ராஜ யோகம்...

சுருக்கம்

Budhan Peyarchi Palangal 2022: புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன். இதுவரை மேஷ ராசியில் பயணித்து வரும் புதன் இன்னும் இரண்டு மாதங்களில், சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் சஞ்சரிக்கும்.

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு ராசி மாறும் போதெல்லாம், அதன் தாக்கம் சுப மற்றம் அசுப பலன்களை தருகிறது. இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12  ராசிகளிலும் காணப்படுகின்றது.

புதன் பெயர்ச்சி 2022: 

புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன். இதுவரை மேஷ ராசியில் பயணித்து வரும் புதன் இன்னும் இரண்டு மாதங்களில், சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் சஞ்சரிக்கும். புதனின் இந்த நிலை 12 ராசிகளையும் பாதிக்கும். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இருப்பினும்  புதனின் ராசி மாற்றம் காரணமாக, குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் வந்தடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் திடீர் அதிஷ்டம் உண்டாகும்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம், சிறப்பாக இருக்கும். உங்களுக்கு புதனின் அருளால் திடீர் பண ஆதாயங்கள் உண்டாகும். நீங்கள் தொட்டது துலங்கும். நீங்கள் துவங்கும் புதிய தொழில் வெற்றி பெறும். நீங்கள் தொழில் துவங்க சிறந்த நேரம் இதுவாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் வேலைகள் வெற்றி பெறும். சொத்து, வாகனம் வாங்கயோகம் பிறக்கும். இந்த கலாத்தில் பணம் சம்பாதிப்பதற்கான சிறப்பான பலன் உண்டு. 
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் புதனின் ராசி மாற்றம், வேலையில் மதிப்பும் மரியாதையும் கூடும்.திடீர் பண ஆதாயம் கூடும்.  பணியிடத்தில்  உயர்வு கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் யோகம் பிறக்கும். பணியிடத்தில் பல வித பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். வெற்றி வாய்ப்பு உங்களை தேடி வரும். 

 மேலும் படிக்க....Lunar Eclispe 2022 in india: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...நேரம், தேதி குறித்து முழு விவரம் உள்ளே...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்