Mothers Day Gifts : அன்னையர் தினத்தில் உங்க அம்மாவுக்கு என்ன பரிசு தரப்போறீங்க..? பெஸ்ட் ஐடியா இதோ..!

By Anu KanFirst Published May 7, 2022, 10:43 AM IST
Highlights

Happy Mothers Day 2022: நாம் இந்த பூமிக்கு வரவும் உயிர் வாழவும் காரணமாகத் திகழும், அன்னையை என்ன பரிசு கொடுத்து மகிழ்விக்கலாம் என்ற யோசனை உள்ளதா..? அப்படினா இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

நாம் இந்த பூமிக்கு வரவும் உயிர் வாழவும் காரணமாகத் திகழும், அன்னையை என்ன பரிசு கொடுத்து மகிழ்விக்கலாம் என்ற யோசனை உள்ளதா..? அப்படினா இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

மாதா,பிதா,குரு, தெய்வம் என்று போற்றப்படும், அன்னைக்கு நமது மரபில் எப்போதுமே முதலிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியாக, தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை என்று போற்றப்பட்டு அன்னைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசும் அதிக முக்கித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் அல்லவா..? அப்படியாக உங்கள் அன்னையை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சிறந்த யோசனைகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தாய்க்கு ஓய்வு கொடுங்கள்:

ஆண்டு முழுவதும் உழைத்து கொண்டிருக்கும், உங்கள் தாய்க்கு இந்த நாளில் வெளியே கூட்டி சென்று அவர்களை இயற்கையை ரசிக்கும் படி செய்யலாம். இது அவர்களுக்கு வாழ்வில் புதிய புத்துணர்ச்சியை அளிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக நேரத்தை செலவிட அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 

நீண்ட நாள் ஆசை:

அன்னையர் எப்போதும் தியாகத்தின் மறு உருவமாக திகழ்கின்றனர். அவர்கள் தங்களின் ஆசைகளை மனதில் வைத்து பூட்டி கொள்வார்கள். நீங்கள் அவர்களிடம், உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டால் கூடா அவர்கள் வாய்விட்டு கேட்க மாட்டார்கள். எனவே, நீங்கள் இந்த நேரத்தில் அவர்களின் நீண்ட கால ஆசைகளை தெரிந்து வைத்து கொண்டு நிறைவேற்ற வேண்டும். அவர்களை முதுமையில், இருந்து புத்துணர்ச்சியான இளமைக்கு திரும்பும் படி செய்ய வேண்டும்.

பிடித்த இடம்:

உங்கள் தாய்க்கென்று பிடித்த இடங்கள் ஏராளமாக இருக்க கூடும். அதை பேச்சு வாக்கில் உங்களிடம் தெரிவித்திருப்பார். அந்த இடத்தை நினைவு வைத்து கொண்டு சற்றும் யோசிக்காமல் அந்த இடங்களுக்கு சர்ப்ரைஸாக அன்னையர் தினத்தில் கூடி சென்று அசத்துங்கள்.

மனம் விட்டு பேசு பேசுங்கள்:

தாயிடம் தொடர்ந்து மனம் விட்டு பேசுங்கள். இன்றைய நவீன காலத்து பிள்ளைகள் தொழிநுட்பத்தில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க துவங்கிவிட்டனர். தாயுடன் பேசும் நேரம் குறைவாக இருக்கும். எனவே, இன்று முதல் உறுதி மொழி எடுங்கள் தாயுடன் நீங்கள் பேசும் நேரத்தை அதிகரியுங்கள். தாய் தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை மனதார உணர்ந்து நடந்து கொள்வதே தாய்க்கு நாம் அளிக்கும் சிறந்த அன்னையர் தின பரிசாக அமையும்.

தாய்மார்களின் விருப்பங்கள்:

நம் தாய்மார்களுக்கு பிடித்திருந்தால், நடனம், பாட்டு, யோகா, இசைக்கருவி வாசித்தல் போன்ற பொழுது போகு விஷயங்களை அவர்கள் தொடர ஏற்பாடு செய்யலாம். பெரும்பாலும், அடுப்பில் வேலை செய்யும் அன்னையர்கள் பாட்டு பாடி கொண்டும், கேட்டு கொண்டும் சமைப்பார்கள். அவற்றை கவனித்து அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் விருப்பினால், ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்து விடலாம். 


 அன்னையர் தினம் பரிசு:

அவர்களுக்கு  பிடித்த பூ அல்லது மூலிகை மரக்கன்றுகளை பரிசாக வழங்கலாம். புடவை எடுத்து கொடுக்கலாம். சில தாய்மார்கள் நகைகள் மீது அதிக பிரியம் கொண்டவர்கள். எதுவும் கொடுக்க முடியவில்லை என்றாலும், இந்த நாளில் அன்பின் முத்தம்  ஒன்று நிச்சயம் கொடுக்கலாம். அதுவே, அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் சிறந்த பரிசு ஆகும். மேலும், அவர்களுக்கு பிடித்தால், பழைய படங்களை டிவியில் திரையிட்டு காட்டலாம்

மேலும் படிக்க ....அன்னையர் தினம் 2022: நமது உடலுக்கு உயிர் கொடுத்த அன்னையின் வரலாறு தெரியுமா..? மே 8 தினம் கொண்டாடத்தின் சிறப்பு

click me!