
நீதியின் கடவுளான சனி பகவான் 2025, மார்ச் 29 வரை அதாவது, மூன்று ஆண்டு காலம் கும்ப ராசியில் இருக்கப் போகிறார். இதனால், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் வேதனையாகத்தான் இருக்கும்.
கும்பத்தில் சனி 2022:
அவரவர் செயல்களுக்கு ஏற்ற வகையில் கர்ம பலன்களைத் தரும், சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 29-ம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்துள்ளார்.
இந்த ராசி மாற்றம் சிலருக்கு சிக்கலை ஏற்பட்டதும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சனி பகவானின் கருணை இருந்தால் பிச்சைக்காரன் கூட லட்சதிபதியாகலாம். அதேபோன்று, தீய பார்வை இருந்தால் லட்சதிபதியும் பிச்சை எடுக்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகரம் மற்றும் கும்பத்தை ஆளும் கிரகம் சனி தேவன். தற்சமயம் சனி தனது ராசியில் கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ஏழரை நாட்டு சனியில் மொத்தம் மூன்று கட்டங்கள் உள்ளன. இதனால் யாரெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கும்பம்:
2022 ஏப்ரல் 29-ம் தேதி முதல் சனி பகவான் கும்ப ராசியில் பிரவேசித் துள்ளார். இதனால், உங்களுக்கு ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கிவிட்டது. நீங்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பிரச்சினைகள் சூழும். எனவே, எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருந்தால், வேதனைகள் அதிகரிக்கும்.
மகரம்:
உங்களுக்கு சனியின் பார்வையில் கெடு பலன்கள் ஏற்படும். இந்த நேரத்தில், நீங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏழரை சனியின் மத்திம காலத்தில் இருப்பவர்களுக்கு எங்கிருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை. நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்லும் போது, மிகுந்த எச்சரிக்கை அவசியம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் வன்முறையில் ஈ டுபடாமல் இருக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நபர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் அவசியம்.கடன் சுமை கூடும்.வாழ்வில் எச்சரிக்கை அவசியம், இல்லையெனில் எதிரிகள் உங்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். நீங்கள் இலக்கை அடைவதில் அதிக கவனமாக உழைக்க வேண்டம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.