
சனிக்குப் பிறகு மெதுவாக நகரும் கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும். சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இரண்டு கிரகங்களும் தனது ராசியை மாற்றுகிறது. இது தவிர, இவை எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் செல்வது மற்றொரு சிறப்பாகும். ஏப்ரல் மாதத்தில் ராகு கிரகம் மேஷ ராசியில் பிரவேசித்துள்ளது.
ராகுவின் நேரடி அருள்:
கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ரசிக்கும் ஒவ்வொரு பாதிப்பை ஏற்படும். ஒருவரது ராசியில் ராகு கேதுவின் அசுப பலன்கள் அதனால், வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். எனினும், இந்த இரு கிரகங்களும் பல சுப பலன்களையும் அளிக்கின்றன. ராகுவின் அருளால் 1 வருடத்திற்கு மேல் மகத்தான சுப பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முதல் ராகுவின் நேரடி அருள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையில் முழு ஆதரவு கிட்டும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருளால், அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள்நடக்கும். வேலை செய்யும் இடத்தில் புது முன்னேற்றம் காணப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருளால், இந்த நாள் கொஞ்சம் சுமாரான நாளாக இருக்கும். யாரை நம்பியும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுடைய ராகுவின் அருளால், நினைத்தது நடக்கும். வேலையில் பாராட்டுகள் குவியும். இந்த நாள் மனநிறைவாக இருக்கும். எதிர்பாராததிடீர்நல்ல செய்தியின் மூலம் சந்தோஷத்தில் திகைத்துப் போகப் போகிறீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருளால், லேசான தடுமாற்றம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பம் கொஞ்சம் இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள், உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்வில் குழப்பம் நீங்கும். தாய் வழி உறவு வலுப்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் ராகுவின் அருளால், உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சில் இருக்கும் உத்வேகம், தெளிவு அனைவரையும் வியக்க வைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் ராகுவின் அருளால், நினைத்த காரியத்தை சாதிக்க போகிறீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். சொந்தத் தொழிலில் அமோக லாபம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிகாரர்கள் ராகுவின் அருளால், கொஞ்சம் அதிக தெளிவு காணப்படும். எதையும், சிந்தித்து செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். இன்று எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ராகுவின் அருளால், இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர நல்ல காலம் இதுவாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் எந்நேரமும் உங்கள் அருகில் வரலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். திருமணம் விரைவில் நடக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருளால், இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளை இன்று தொடங்கலாம். வேலை செய்யும் இடத்தில் அக்கறை கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு ராகுவின் அருளால், இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீடு, சொத்து வாங்கும் யோகம் பிறக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ராகுவின் அருளால், நீங்கள் எடுத்த முயற்சிகள் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுடைய வாழ்க்கை துணை உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.