
2022 ஏப்ரல் 25 ஆம் தேதி புதன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்கு இடம் மாறியுள்ளார். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம், எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போது சிலருக்கு, சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில், கிட்டத்தட்ட 9 கிரகங்கள் தனது ராசியை மாற்றிவிட்டன. இது தவிர, கோள்கள் பின்னோக்கியும் நகர்ந்து செல்கின்றன. இதையடுத்து, வருகிற மே 10 முதல், புத்திசாலித்தனத்தின் காரணியான, புதன் கிரகம், பிற்போக்கு இயக்கத்தை தொடங்குகிறது. புதன் ஜூன் 3 வரை இந்த நிலையில் இருக்கும்.
இந்த புதனின் பிற்போக்கு இயக்கம், சிலருக்கு நன்மையாக இருக்கும், சிலருக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில், தற்போது நிகழும் புதனின் பிற்போக்கு இயக்கத்தால், எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்:
புதனின் பிற்போக்கு இயக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும். பழைய முதலீடுகள் வெற்றியை தரும். தொழிலில் லாபம் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில், வேலை பாராட்டப்படும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
மீனம்:
புதனின் பிற்போக்கு இயக்கம் மீன ராசிக்கார்ரகளுக்கு நல்ல பலன்களை தரும். பண வரவு இருக்கும். பணியிடத்திலும் உங்கள் திறமை முன்னேற்றம் காணப்படும். பொருளாதார, நிதி நிலைமை மேம்படும். காதல் விஷயத்தில் வெற்றி நிச்சயம். வெளியூர் பயணங்கள் செலவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு புதனின் பிற்போக்கு இயக்கம் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். இதுவரை தடைபட்ட வேலைகள் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். திடீர் பண வர உறவு அதிகரிக்கும். எதிலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.