
நிழல் கிரகமான ராகு மற்றும் கேது 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி தனது ராசியை மாற்றியுள்ளனர். ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறியுள்ளார். அதேபோன்று, கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளார். தீய கிரகமாக கருதப்படும் ராகு, மற்றும் கேது சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு ராசி மாறியுள்ளனர். இவர்கள் சுமார் 1 1/2 ஆண்டுகள் அங்கு தங்குவார்கள்.
கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ரசிக்கும் ஒவ்வொரு பாதிப்பை ஏற்படும். இது சிலருக்கு நன்மையாக இருக்கும் சிலருக்கு தீமையாக இருக்கும். அப்படியாக ராகு, கேதுவின் மாற்றம் யார் யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது மாற்றத்தால் இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும். ஆரோக்கியம் மேம்படும். போட்டி தேர்வுகளின் வெற்றி நிச்சயம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது மாற்றத்தால் இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடங்களில் மதிப்பு, மரியாதை உயரும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது மாற்றம் நீங்கள் எதிர்பாராத திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நட்பு வட்டம் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வெற்றி நிச்சயம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். ஆரோக்கியம் மேம்ப்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் நீங்கள் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சுறுசுறுப்படையும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் உழைப்பு தேவை. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் சுபகாரிய முயற்சிகளில் தடைஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடியும். துணிச்சலாக முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய சிந்தனைகள் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கை அவசியம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் இன்று நீங்கள் தடைகளை தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பிறக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் ராகு, கேது பெயர்ச்சியால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆர்வம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. அவசர முடிவுகள் ஆபத்தை தரலாம். தடைப்பட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் அனுகூலமான நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். எதிலும், பொறுமையாக இருப்பது அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.