Sukran Peyarchi 2022: இந்த ராசிகளுக்கு அதிகப்படியான தாக்கம்..யாருக்கு நன்மை? யாருக்கு தீமை? 12 ராசிகளின் பலன்!

Anija Kannan   | Asianet News
Published : May 08, 2022, 05:00 AM IST
Sukran Peyarchi 2022: இந்த ராசிகளுக்கு அதிகப்படியான தாக்கம்..யாருக்கு நன்மை? யாருக்கு தீமை? 12 ராசிகளின் பலன்!

சுருக்கம்

Sukran Peyarchi 2022: நவக்கிரகங்களில் சூரியனின் மகன் சனீஸ்வரர் என்றும், சந்திரனின் மகன் புதன் என்பது புராணங்கள் சொல்லும் வரலாறு ஆகும். இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

நவக்கிரகங்களில் சூரியனின் மகன் சனீஸ்வரர் என்றும், சந்திரனின் மகன் புதன் என்பது புராணங்கள் சொல்லும் வரலாறு ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் புதனோடு சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் அவர் நிம்மதியான வாழ்க்கை, வாழ்வார்கள். எதிலும், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு, இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் வருமானத்தை அபரிமிதமாக அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கும். உங்கள் தரப்பு நியாயங்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும்.

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும், சுக்கிரனின் ராசி மாற்றம் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். மகிழ்ச்சி உங்களை திக்கு முக்காட செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு  சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பல வழிகளிலும் பணம் சம்பாதிப்பார்கள். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டுத் தொழில் துவங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. துறைசார் நிபுணர்களின் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் பதில் கிடைக்கும்.

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமை வலுவாகும்.  

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தை இனிமை தேவை. முன்கோபம் தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பது நல்லது. 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் அனுகூலம் பலன் கிடைக்கும். தொலைதூர நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு  இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம், புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கான சரியான நேரமாக இது இருக்கும். இந்த நேரம் அனைத்து விஷயங்களிலும் சிறப்பான பலன்களைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பாக இருக்கும். 

விருச்சகம்:

விருச்சகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இருக்கிறது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வசதிகள் பெருகும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு பெரிய லாபத்தை தரும். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

தனுசு: 

தனுசில் இன்று நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம், அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். இதுவரை முடங்கிக் கிடந்த பணிகளும் தொடங்கும். தொழில் சாதகமாக முடியும். மொத்தத்தில் இந்த நேரம் எல்லாவிதமான பலன்களையும் தரும்.

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் சஞ்சாரம் தடைப்பட்ட சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் சஞ்சாரம், பதவி உயர்வு கிடைப்பதற்கான முழு வாய்ப்புகளும் உண்டு. வேலை செய்யும் இடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சுக்கிரனின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். இதுவரை முடங்கிக் கிடந்த பணிகளும் தொடங்கும். தொழில் சாதகமாக முடியும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கசப்பு நீங்கும்.

 மேலும் படிக்க...Budhan Peyarchi: புதனின் பிற்ப்போக்கு மாற்றத்தால்...திடீரென பணம் வரவு பெறும் 3 ராசிகள்...செல்வம் செழிக்கும்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்