
சனி பகவான் ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை, அதாவது நேற்று முதல் தனது சொந்த வீட்டில் நுழைய பிரவேசம் பண்ணியுள்ளார். இவர் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வரை கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பார்.
கும்ப ராசியில் உள்ள சனிபகவான் ஜூன் முதல் கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி நகர்ந்து மகர ராசிக்கு செல்கிறார். அவர் மகர ராசியில் 2023 ஜனவரி 17ஆம் தேதி வரை இருந்து, பின் மீண்டும் நேர்கதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும்போது, சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் ஏற்படும். எனவே இந்த நாளில் இரண்டு ராசிக்காரர்கள் மீது சனி தசையின் தாக்கமும், ஒரு ராசியின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் இருக்கும்.
சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரகளுக்கு மோசமான விளைவுகள் ஏர்படும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்:
ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பிரச்சனை உள்ளதாக இருக்கும். இன்று முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் தொல்லை கொடுக்க கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு சட்ட சிக்கல்கள் எற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். கடன் சுமை கூடும். நீங்கள் இந்த நேரத்தில் பொறுமையுடனும் நிதானத்துடனும் இருப்பது அவசியம்.
சிம்மம்:
ஜோதிட சாஸ்திரப்படி, சிம்மத்தில் பிறந்தவர்கள் சனியின் மாற்றத்தால், வேலையில் பிரச்சனைகள் வரலாம்.
இந்த நேரத்தில், கோபத்தைத் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு பிரச்சனைகள் தொல்லை கொடுக்கும். உங்கள் இலக்கை அடைவதில் கடுமையாக உழைக்க வேண்டு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் அவசியம்.
கன்னி:
ஜோதிட சாஸ்திரப்படி, கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் பல பிரச்சனைகள் உருவாகலாம். உங்களுக்கு குடும்பத்திலும் குழப்பங்கள் ஏற்படலாம். பெற்றோர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். கடன் வாங்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம். துணிச்சலுடன் செயல்படும் காலம் இதுவாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.