
சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணத்தின் போது, குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சூரிய கிரகணம்:
சூரியன், சந்திரன் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி அதாவது இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகிறது.
சூரிய கிரகணம் இந்த ஆண்டு சனி அமாவாசை அன்று நடைபெறுகிறது.எனவே, இந்த சூரிய கிரகணத்தின் போது, குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசையை ஒட்டி நிகழ்ந்துள்ளதால் சிலருக்கு நன்மை உண்டாகும்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம் நன்மையாக இருக்கும். உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம் வெற்றியை தரும். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டு சனி இருப்பதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்களுடைய நேர்மைக்கு உரிய மதிப்பீடு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம் நன்மையாக இருக்கும். இந்த நேரத்தில் உறுதியான முடிவுகளை எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், எதிலும் அமைதியுடன் இருப்பது நல்லது. எதிலும், பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகளில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், எதிலும் பெற்றோரின் ஆதரவை பெறுவது நல்லது. கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் அனுகூல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உருவாகும் என்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், தன்னம்பிக்கையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். சமூகத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளின் மீது அதிக ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்குசனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் தடை, தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்குசனி பெயர்ச்சியை ஒட்டி நிகழும் சூரிய கிரகணம், காரணமாக தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகத்திற்கு குறைவிருக்காது. முகத்தில் புதிய பொலிவு பிறகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். ஆரோக்கியம் சீராகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.