Surya Grahan: இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பம்...உஷாராக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

Anija Kannan   | Asianet News
Published : Apr 29, 2022, 04:38 PM IST
Surya Grahan: இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பம்...உஷாராக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

சுருக்கம்

Surya Grahan 2022: 2022ம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி அதாவது இன்று நள்ளிரவு மேஷ ராசியில் நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி மே1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:08 மணிக்கு நிறைவு பெறும்.

Surya Grahan 2022: 2022ம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி அதாவது இன்று நள்ளிரவு மேஷ ராசியில் நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி மே1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:08 மணிக்கு நிறைவு பெறும்.

சனிக்கிழமை ஏற்படும் கிரகணத்தால், இம்முறை சனி அமாவாசை கூட்டு உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிகளில் அதன் பலன் நேர்மறையான சில ராசிகளுக்கு அதன் பலன் எதிர்மறையாக இருக்கும்.  எனவே, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் பொழுது எந்தெந்த ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை ஜோதிடர்களின் கணிப்பின் படி தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், சனி அமாவாசை நாளான இன்று நள்ளிரவு மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. எனவே இது உங்கள் ராசிக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், மன உளைச்சலுக்கு ஆளாகலாம். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த கிரகணத்தின் போது இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து விடவும்.

கடகம்:

இன்று நள்ளிரவு நிகழும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், கடகம் ராசியில் நேரடி விளைவை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தின் போது கடகத்தை ஆளும்  சந்திரன், ராகுவுடன் மேஷ ராசியில் பயணிப்பார். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். எதிலும், பொறுமையாக இருப்பது நல்ல பலன்களை தரும். இது உங்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும். பயம்  உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நள்ளிரவு நிகழும் சூரிய கிரகணம், அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். பேச்சில் நிதானம் அவசியம். வீண் செலவுகள் வரும். பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். எதிலும் துணிச்சலுடன் செயப்படுங்கள். எப்போதும் உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். சூரிய கிரகணம் நிகழும் போது இரவு வேளையில் வெளியூர் பயணம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். 

சூரிய கிரகணம் நிகழும் போது:

இந்த மூன்று ராசியினரும்  சூரிய கிரகணம் நிகழும் போது, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். மனதில் இஷ்ட தெய்வத்தை நினைத்துபூஜை அறையில் பூஜை செய்ய வேண்டும். பயணங்களை தவிர்த்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம், வருகிற அக்டோபர் மாதம் 25 ம் தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி நேர கிரகணம் என்பதால் இந்தியாவில் தெரியாது. 


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்