Sani Peyarchi 2022: 30 வருடங்களுக்கு பிறகு கும்பத்தில் இன்று சனி பெயர்ச்சி...ராஜா யோகம் பெறப்போகும் 5 ராசிகள்!

Anija Kannan   | Asianet News
Published : Apr 29, 2022, 08:00 AM IST
Sani Peyarchi 2022: 30 வருடங்களுக்கு பிறகு கும்பத்தில் இன்று சனி பெயர்ச்சி...ராஜா யோகம் பெறப்போகும் 5 ராசிகள்!

சுருக்கம்

Sani Peyarchi 2022 Today: நீதியின் கடவுளான சனிபகவான் ஏப்ரல் 29ஆம் தேதி அதாவது, இன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது எந்ததெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை பார்த்துவ தெரிந்து கொள்ளுங்கள்.

சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி:

நீதியின் கடவுளான சனிபகவான் ஏப்ரல் 29ஆம் தேதி  அதாவது, இன்று மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வரை கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பார் சனி பகவான். 

சனிபகவான் நீதிமான் என்பதால், தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார். நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும். குறிப்பிட்ட இந்த 5 ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தர போகிறார். யார் அந்த யோக ராசிகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிகழும் சனி பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெறலாம். ஒரு பெரிய ஒப்பந்தத்தை கையெழுத்திடலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில், நீங்கள் துவங்கும் வேலையில் வெற்றி கிடைக்கும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்:

கடகம் ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி அனுகூலமான பலன்களை கொடுக்கும். இந்த கிரகணத்தால் உங்களுக்கு பொருளாதார பலன்கள் மேம்படும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டலாம். தாயாரின் சிறப்பான ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம் இதுவாகும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

ரிஷபம்:

ஜோதிடத்தின் படி சனி கிரகம் இன்று ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் பெயர்ச்சி ஆகும். வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சி கிட்டும். நீங்கள் துவங்கும் புதிய தொழில் உங்களுக்கு வெற்றியை தரும். வேலையில் புதிய மாற்றம் நிகழும், விரும்பிய வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிகழும் சனி பெயர்ச்சி சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி நிச்சயம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வரலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.

மேலும் படிக்க... சுக்கிரன் பெயர்ச்சி நாளில்... இந்த ராசிகளுக்கு சுக்கிரன் தசை, அடிக்கும் ஜாக்பார்ட்...இன்றைய 12 ராசிகளின் பலன்!

மேலும் படிக்க....1000 வருடத்திற்கு பிறகு ஒரே நேர்கோட்டில் இணையும் கிரகங்கள்...மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்