
பஞ்சாக்கின் படி சூரிய கிரகணம்:
பஞ்சாக்கின் படி, 2022 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 இரவு 12:15 மணிக்கு அதாவது, நாளை தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைப்படுகிறது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் , தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். பொதுவாக கிரகணம் நிகழும் போது, அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்து நாட்காட்டியின் படி சூரிய கிரகணம்:
இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டும் முதல் சூரிய கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுகிறது. இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஏனெனில், அப்படி வெளியே வரும் போது, கர்ப்பிணிகள் மீது வெளிச்சம்பட்டால், சில கதிர் வீச்சுகள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். மேலும், அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்.
கிரகத்தில் இருந்து விடுபட என்ன செய்ய கூடாது:
முதலில் கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் தையல், வெட்டுதல், சுத்தம் செய்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் வளரும் நம்முடைய குழந்தைக்கு சேதத்தை ஏற்படுத்துமாம்.
கிரகத்தில் இருந்து விடுபட கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்:
கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
சூரிய கிரகண நேரத்தில் இறைவனை வழிபடுதல் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு 100 மடங்கு அதிகமான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
கிரகத்தில் இருந்து விடுபட சுப்ரபாதம், விநாயகர் துதி ஆகியவை பாடலாம். புண்ணிய நதிகளில் ஸ்தானம் செய்யலாம். தானங்கள் வழங்கலாம்.
மேலும், கிரணகத்துக்கு முன்பு முன்பும், பின்பும் வீட்டை கழுவிவிட்டு நாமும் குளிக்க வேண்டும். எனவே, கரிப்பிணி பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால், இவற்றை அவசியம் பின்பற்றுங்கள். மேலும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.