ஹோம்சிக் கொண்ட நபரா நீங்கள்..? அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்..!!

By Dinesh TGFirst Published Nov 2, 2022, 4:39 PM IST
Highlights

படிப்பு காரணமாக, பணி நிமித்தமாகவும் வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு ஹோம்சிக்னஸ் இயல்பான ஒன்று. இந்த உணர்வை நீண்ட காலமாக அனுபவித்து பயனில்லை. வீடு சார்ந்த எண்ணத்தை நீங்கள் கடக்கும் போதுதான், மற்றொரு புதிய வாழ்க்கை உங்களுடையதாக அமையும்.
 

அதுவரை வீட்டில் பெற்றோரின் அன்பு மகனாகவோ, மகளாகவோ வளர்ந்தவர்கள் திடீரென அவர்களை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். ஆரம்பத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு ஏக்கமாக தோன்றும். இதனால் அவர்களுடைய எதிர்கால கேள்விக்குறியாகும். நிகழ்கால வாழ்க்கையை வாழ முடியாமலும், எதிர்காலத்தை குறித்து சிந்தனையில்லாமலும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இதனால் ”படிப்பும் வேண்டாம், வேலையும் வேண்டாம், வீட்டுக்கு போனால் போதும்” என்கிற நிலைக்கு சென்றுவிடுவர். உங்கள் வாழ்க்கை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் போது, இப்படிப்பட்ட சூழல்கள் மற்றும் எண்ணவோட்டங்கள் எழுவது சகஜம் தான். அதை நீங்கள் சகித்துக் கொண்டால் மட்டுமே, முன்னோக்கி செல்லும் பாதை சுமுகமாக இருக்கும். ஆய்வின்படி, 94% மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய முதல் 10 மாதங்களில் கடுமையான வீட்டு மனச்சோர்வை அனுபவிக்கின்றனர். இந்த வலியை ஒருவர் பொறுமையுடன் கடக்க வேண்டும், இதற்கு குறிப்பிட்ட முயற்சி தேவை.

சுறுசுறுப்பாக இருங்கள்

முதலாவதாக, நீங்கள் எவ்வளவு அதிகமாக புகார் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் வீட்டு மனச்சோர்வை அனுபவித்து வருகிறீர்கள் என்று அர்த்தம். அதனால் மூலையில் சும்மா முடங்கிக் கிடக்கக் கூடாது. நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், மற்ற நல்ல மாணவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் வேலையில் இருந்தாலும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். காலை நடைப்பயிற்சி செய்யுங்கள். இதுபோன்ற செயல்பாடுகள் உங்களை வீடு சார்ந்த எண்ணங்களில் இருந்து மடைமாற்றும்.

இருக்குமிடம் மிகவும் முக்கியம்

உங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், நீங்கள் தங்கும் இடத்தை தேர்வு செய்யலாம். நீங்களே சமைத்து சாப்பிட விரும்பினால், அதற்கேற்றவாறு ஒரு அறையில் தங்குங்கள். உடன் சில நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு நீங்களே சமைக்கலாம். இது உங்களுக்கு நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். எங்கும் சோம்பேறியாக நேரத்தை செலவி வேண்டாம். 

சமூகவலைதளத்தில் இருந்து விலகி இருங்கள்

இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் வேலைக்கு செல்வோர் வரை, சமூகவலைதளங்களை விட்டு விலகி இருப்பது கடினம் தான். ஆனால் நீங்கள் அதை செய்தேயாக வேண்டும். மனதை சஞ்சலப்படுத்துவதில் சமூகவலைதளங்கள் முதன்மையில் உள்ளது. மற்றவர்களுடைய வாழ்க்கை மீது ஆசை ஏற்பட்டு, நமக்குள் ஒரு ஏக்கத்தையும் சோகத்தையும் வரவழைக்கிறது. இது வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உங்கள் கல்லூரியில் பல்வேறு சமூக சேவைகளில் செயல்படும் குழுக்கள் இருக்கலாம், அவர்களுடன் கைகோர்த்து, உங்களுடைய நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்தவும்.

ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க இந்த ஒரு இலை போதும்..!!

நீங்கள் இருக்கும் இடம் தான் உங்களுடைய வீடு

நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கான வீட்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் பயன்படுத்திய சில பொருட்களை எடுத்து வந்து, உங்களுடைய வசிப்படுத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களது வீடு மிகவும் அருகாமையில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதேபோல நீங்கள் பணி செய்பவராக இருந்தால், எந்நேரமும் ஹோம்சிக்கை மறப்பதற்கு வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம். மீதமுள்ள நேரத்தை ஒரு நல்ல செயலுக்கு ஒதுக்குங்கள். 

குழந்தைகளுக்கு மழைக்கால நோய் பாதிப்பு வாரமல் தடுக்க இதைச் செய்யுங்க..!!

உதவி கேட்க தயங்க வேண்டாம்

ஒரு புதிய இடம், வேலை போன்றவற்றுக்கு ஏற்ப கடினமாக இருக்கும்போது ஒருவரின் உதவியைப் பெறுங்கள். உங்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருங்கள். கல்வி நிறுவனங்களிலும் ஆலோசனை சேவைகள் உள்ளன, அவர்களின் உதவியைப் பெற தயங்க வேண்டாம். குடும்பத்தினருடன் தொடர்பில் இருங்கள். இந்த செயல்பாடுகள் மூலம் விரைவில் நீங்கள் வீடு சார்ந்த மனச்சோர்வில் இருந்து விடுபட முடியும்.

click me!