ஆண்களை விடவும் பெண்கள் அதிகமானோர் குண்டாக இருப்பதற்கு காரணம் இதுதான்..!!

By Dinesh TGFirst Published Nov 1, 2022, 6:02 PM IST
Highlights

அதிக உடல் பருமன் என்பது முக்கிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. உலகளவில் 150 கோடி உடல் பருமனால் அவதி அடைந்து வருகின்றனர். அதில் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 
 

ஆண்களை விட பெண்கள் உடல் பருமனால் அவதி அடைவதை அதிகம் பார்க்க முடிகிறது. உடல் பருமன் பிரச்னைக்கு முதல் காரணமாக இருப்பது உணவுப் பழக்கம் தான். கடந்த 2014-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு உடல் பருமன் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் , உலகளவில் 150 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உடல் பருமனால் அவதி அடைந்து வருகின்றனர் என்றும், அவர்களில் 30 கோடிக்கும் அதிகமானோர் பெண்களாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல்பருமன் புற அழகை மட்டுமில்லாமல் மூச்சுத்திணறல், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் பாதிப்பு, கருவுறுதல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிடுகிறது. இந்நிலையில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகமானோர் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எந்தவித வேலையும் செய்யாமல் இருப்பது

இன்று பலரும் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் பெரியளவில் அவர்களுடைய உடலில் இயக்கமில்லாமல் போய்விடுகிறது. இதுதான் உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. மேலும் அவ்வப்போது துரித உணவுகளை சாப்பிடுவது, உணவு சாப்பிட்டதும் அதற்கேற்றவாறு வேலை செய்யாமல் இருபது உள்ளிட்டவையும் உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. தினமும் காலை எழுந்ததும் நடைப் பயிற்சி செய்வது, யோகா செய்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இதை பழமாக்கிக் கொண்டால், உடல் பருமன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணலாம்.

அதிகமாக சக்கரை உணவு சாப்பிடும் பழக்கம்

அதிகப்படியாக மது அருந்துவது, சக்கரை அதிகமாகக் கொண்ட பானங்களை குடிப்பது உள்ளிட்டவை காரணமாகவும் உடல் எடை கூடுகிறது. மேலும் இவ்விரண்டு பழக்கங்களும் வேறுசில உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. இதுதவிர, மரபு சார்ந்தும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குண்டாக இருக்கும் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனினும் இதை மருத்துவர்கள் துணை கொண்டு எளிதில் இந்த பிரச்னைக்கு தீர்வை பெறலாம்.

ஹார்மோன்கள் காரணமாகவும் இருக்கலாம்

நம்முடைய உடலின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொரு ஹார்மோன் காரணமாகவுள்ளன. அதன்படி பசிக்காக இயங்கும் ஹார்மோன்கள், அதிகளவு பசியைத் தூண்டும் போது, நாம் மேலும் உணவு சாப்பிட விரும்புவோம். இதன்காரணமாகவும் உடல் எடைக் கூடும். உரிய மருத்துவரை அணுகி, இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்னை கட்டுக்குள் வரும். அதேபோல மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்னைக் காரணமாகவும் பசி அதிகரிக்க வாய்ப்புண்டு. அப்போது நாம் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

குழந்தைகளுக்கு மழைக்கால நோய் பாதிப்பு வாரமல் தடுக்க இதைச் செய்யுங்க..!!

மருந்துகள் காரணமாகவும் உடல் எடை கூடும்

உடல்நலனுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து காரணமாகவும், பசி எடுத்து சாப்பிடத் தோன்றும். அதன்காரணமாகவும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களிடம் இந்த பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. அதனால் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்தின் தன்மை மற்றும் அதனுடைய பக்கவிளைவுகள் குறித்து டாக்டரிம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. ஒருசிலரு ஸ்டீராய்டு மருந்து சாப்பிடுவதன் காரணமாகவும் பசி தொந்தரவு ஏற்பட்டு, அதிகமாக சாப்பிடத் தோன்றும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழக்கமாக்கிக் கொண்டால் சீக்கரமே உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா- அந்த நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

click me!