இந்த சமையற் பொருட்களை வைத்து பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை எளிதாக நீக்கலாம்..!!

By Dinesh TGFirst Published Nov 1, 2022, 11:31 AM IST
Highlights

பற்களில் அசிங்கமாக தெரியும்  மஞ்சள் கறை பிரச்னையால் பலரும் அவதியுறுகின்றனர். மருத்துவ முறையில் இதை எளிதாக நீக்கிவிட முடியும். ஆனால் அதற்கு சில ஆயிரம் செலவழிக்க வேண்டும். இக்கட்டுரையை படிங்க, இனிமேல் அந்த கவலை உங்களுக்கு இருக்காது.
 

பலருக்கும் தெரிந்து தான். பற்களிலுள்ள மஞ்சள் கறையை அகற்றுவது சற்று சிரமமானது. இதை சரி செய்வதற்கான பற்பசையை இன்னும் எந்த நிறுவனமும் உருவாக்கவில்லை என்பதே உண்மை. பற்களில் சேரும் அழுக்கை மருத்துவர்கள் உதவியுடன் சுத்தம் செய்யலாம் அல்லது நாம் சாப்பிடும் உணவு முறையில் செய்யப்படும் மாற்றங்களால் பற்களில் மஞ்சள் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். முறையாக பராமரித்தால் இது  சாத்தியப்படக்கூடிய ஒன்று தான். அந்த வகையில் மருத்துவமனைக்கு செல்லாமல், நமது வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து, இந்த பிரச்னைக்கு எளிமையாக தீர்வை காணலாம்.

ஆப்பிள் சிடார் வினிகர்

பொதுவாகவே வினிகரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அதன்காரணமாகவே ஊறுகாய், சீஸ் போன்ற நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கும் உணவுகளில் வினிகர் முக்கிய சேர்மானமாக உள்ளது. பலரும் பல்துலக்கிவிட்டு மவுஷ்வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வாய் கொப்பளிக்கும் போது மவுஷ்வாஷில் சில துளிகள் ஆப்பிள் சிடார் வினிகரை கலக்கவும். அதையடுத்து வாயை கொப்பளித்து துப்பினால் படிப்படியாக மஞ்சள் கறை அகலும். அதிகளவிலான ஆப்பிள் சிடார் வினிகர் பற்களின் எனாமல் சிதைவுக்கு வழிவகுக்கும். அதனால் ஒருவாய் கொப்பளிக்கும் போது, மவுத்வாஷ் லிக்விடில் சில துளிகளை சேர்த்தாலே போதுமானது.

மஞ்சள்

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளில், எண்ணிலடங்கா மருத்துவக் குணங்கள் உள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், உணவுகள் மூலம் ஏற்படும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட தொந்தரவுக்கு மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பற்பசை போட்டு பல் விளக்குவதற்கு முன்னதாக, மஞ்சள் போட்டு பற்களில் தேய்க்க வேண்டும். அதையடுத்து வாயை கொப்பளித்துவிட்டு பற்பசை கொண்டு பற்களை விளக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கரைகள் நீங்கி, பற்கள் பளிச் வண்ணம் பெறும்.

வியக்கவைக்கும் அளவுக்கு நன்மைகளை வாரி வழங்கும் விளக்கெண்ணெய்..!!

ஆரஞ்சு பழத் தோல்கள்

சிட்ரக் பழங்கள் என்று குறிப்பிடப்படும் எலுமிச்சைப் பழம், ஆரஞ்சுப் பழங்களில் அமிலத் தன்மை உள்ளது. அது அப்பழங்களின் தோல்களிலும் காணப்படுகிறது. இதை எங்கு பயன்படுத்தினாலும், அந்த இடம் சுத்தமாகிறது. அதனால் தான் பல்வேறு டிடர்ஜெண்ட் சோப்புகள் மற்றும் தூள்களில் சிட்ரக் அமிலங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அடிக்கடி சிட்ரக் பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பற்கள் சுத்தமாகும். குறிப்பாக உறங்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு தோலினை பற்களில் தேய்த்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் கரை நீங்கிவிடுகிறது. இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால், விரைவாக பற்களின் தோற்றத்தில் மாற்றம் தெரியும்.

நெயில் பாலிஷ் இருந்தா போதும் மருவை விரட்டி விடலாம்..!!

தேங்காய் எண்ணெய்

பற்களில் மஞ்சள் கரை இருப்பதால், பலரும் முழுமையாக சிரிக்க முடியாமல் தவிப்பார்கள். உங்களுடைய இந்த பளிச்சிடும் புன்னையை மீட்டு கொண்டு வர தேங்காய் எண்ணெய் பெரியளவில் துணை புரிகிறது. அதற்கு சில செயல்முறைகளை செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் ஒரு வாய் தேங்காய் எண்ணெய்யை எடுத்து, வாயில் கொப்பளித்து வரவேண்டும். எண்ணெய்யை அடுத்து தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டு, சிறிது நிமிடங்கள் கழித்து பற்பசை கொண்டு பல் துலக்க வேண்டும். இதுபோன்று தினசரி காலை செய்து வருவதன் மூலம், இயற்கையாகவே பற்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும்.

கரித்தூள்

அடுப்புக்கரி கொண்டு பலரும் பற்களை சுத்தம் செய்வதை கிராமப் பகுதிகளில் பார்த்திருப்போம். நகரவாசிகள் இதுபோன்ற பழக்க வழக்கங்களை மறந்துவிட்டார்கள். ஆனால் அடுப்புக்கரி கொண்டு பற்களை சுத்தம் செய்யும் பழக்கமுடையவர்களுக்கு, பற்களுக்கு கால்ஷியம் ஊட்டச்சத்து கூடும். கரிக்கொண்டு பற்களை தேய்த்துவிட்ட பிறகு, அதை நீண்ட நேரம் வாய்க்குள் வைத்திருக்கக்கூடாது. உடனடியாக தண்ணீர் ஊற்றி கழுவிடவேண்டும். இல்லையென்றால் பற்களில் கருப்பு நிறம் படியத் துவங்கும். அதையடுத்து பேக்கிங் சோடா கொண்டு பல் துலக்குவதும், மஞ்சள் கரைகளை நீக்க உதவும். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் விட்டு கலந்து பற்களை துலக்கி வரவேண்டும். இந்த செயல்முறையை பின்பற்று வருவதன் மூலமும் விரைவிலேயே பற்களில் பளீச் வண்ணம் பெறுவதை பார்க்க முடியும்.

click me!