ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது- ஏன் தெரியுமா?

Published : Oct 30, 2022, 05:55 PM IST
ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது- ஏன் தெரியுமா?

சுருக்கம்

பல்வேறு படங்களில் நாம் பார்த்திருப்போம். முத்து நகைகள், தங்க நகைகள், வைர நகைகள் தனித்தனியாக வைப்பது போல காட்சிகள் இருக்கும். ஆனால் அது காட்சிக்கான வைக்கப்பட்டது கிடையாது. உண்மையாகவே நகைகளின் பண்பு அடிப்படையில் அவை பிரித்து வைக்கப்பட்டுள்ளது.  

ஆபரணங்கள் மற்றும் அணிகலன்களை அதனுடைய பண்புகளுக்கு ஏற்றவாறு பராமரிப்பது மிகவும் முக்கியம். தங்கம், வைரம்,
முத்து, பவளம் என எந்தவிதமான நகையாக இருந்தாலும் உரிய முறையில் பராமரித்து வந்தால் மட்டுமே தலைமுறைகளை கடந்து நிற்கும். அப்போது தான் நகைகள் எப்போதும் போல புதுசாகவும், பார்த்தவுடன் கண்களை பறிக்கும் விதமாகவும் இருக்கும். காலத்தை கடந்து நகைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல், அவற்றை நாம் பயன்படுத்தி வரும்போதே தேவையான முறையில் பராமரிப்பது அவசியமாகிறது. எந்தந்த நகைகளை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும், குறிப்பிட்ட நகைகளுடன் வேறு எதுபோன்ற நகைகளை சேர்த்துவைக்கக்கூடாது, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனித்தன்மை கொண்ட தங்கம்

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடியதாக தங்க நகைகள் உள்ளன. அதேபோல நாம் எப்போதும் அணிந்திருக்கக் கூடிய நகைகளும் தங்க நகைகள் தான். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, அதிகமாக வியர்க்கும் போது, ஒப்பனைப் பொருட்களை பயன்படுத்தும் போது நகைகளில் அழுக்கு அதிகளவில் படிந்துவிடும். அப்போது ஒவ்வொரு மாதமும் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில், அன்றாடம் பயன்படுத்தும் தங்கநகைகளை போட்டுவிட வேண்டும். அதனுடன் மைல்டு ஷாம்பூகளை சிறிதளவு ஊறி ஊறவிட்டு எடுக்கவும். அதையடுத்து பல் விளக்கும் பிரெஷ் கொண்டு லேசாக தேய்த்து சுத்தம் செய்து எடுத்தால், தங்க நகைகளுக்கு எந்த பாதிப்பும் வராது. மெஷின் கட்டிங் நகைகள் என்றால், பருத்தி துணிகளில் மட்டும் தேய்த்து எடுத்தால் போதும். வெளியில் செல்லும் போது மட்டும் சில நகைகளை நாம் அணிந்துகொள்வோம். அப்படிப்பட்ட நகைகளை, வெளியில் சென்று வந்த பின் பருத்தி துணிகளை வைத்து சுத்தம் செய்து எடுத்து தனித்தனியாக அதனுடைய பெட்டிகளில் வைத்துவிட வேண்டும். 

மென்மையான முத்து 

பெரும்பாலும் கடைகளில் விற்கக்கூடிய முத்து நகைகளை பார்த்தால், முத்துக்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும். அதற்கு காரணம் முத்துக்கள் மிகவும் மென்மையானவை. அவை மற்ற உலோகத்துடன் சேர்த்து வைக்கப்படும் போது, அதில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று நீங்கள் முத்து நகைகளை வைத்திருந்தால், அதை மற்ற நகைகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. எளிதில் முத்துக்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டுவிடும். முத்து நகைகளுக்கு என்று தனித்தனியாக பெட்டிகள் இருந்தாலும், அவற்றை தனியாகவே வைத்துக்கொள்ளுங்கள். அதேபோன்று மற்ற நகைகளுடன் முத்துச்சரத்தை அணியக் கூடாது. எப்போதும் முத்துக்களை தனியாகவே அணிய வேண்டும். மேலும் உடை விஷயத்திலும் கவனம் தேவை. எளிய முறையில் ஆடைகள் உடுத்தினால் மட்டுமே முத்து நகைகள் எடுப்பாக தெரியும். எப்போதும் கழுத்தோடு ஒட்டிய முத்து நகைகளை வாங்கிடுங்கள். அதிக நீளம் தொங்கவிடும் முத்து நகைகள் சீக்கரம் தளர்வடைந்துவிடும். முத்து நகைகளை அணிந்துகொண்டு ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது, ஒப்பனை செய்வதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவுவது பிரகாசமாக இருக்கும்.

வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தும் போது இந்த விஷயங்களை மனசில வச்சுக்கோங்க..!!

நிறம் மாறக்கூடிய பவளம்

முத்துக்களை போன்றே பவள நகைகளும் மென்மையானவை தான். ஆனால் சுட்டெரிக்கும் சூரிய வெயிலில் பவள மாலைகளை அணிந்தால், அது நிறம் மாறிவிடும் என்று கூறப்படுவதுண்டு. அதேபோன்று குளிக்கும் போது பவள மாலைகளை அணியக்கூடாது, ஒப்பனை செய்யும் போதும் கழட்டி வைத்துவிட வேண்டும். மேலும் வாசனை திரவியங்கள் போடும் போது, தலைக்கு எண்ணெய் வைக்கும் போது பவள மாலைகளை கழட்டி வைத்து விடுங்கள். பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலை செய்யும் போது கூட பவள மாலைகளை அணிந்திருப்பர். ஆனால் துணி துவைக்கும் போது மற்றும் அதிக உடலுழைப்பு கொண்ட பணிகளை செய்யும் போது பவள மாலைகளை அணிவது, அதனுடைய நிறத்தை மாற்றிவிட அதிக வாய்ப்புள்ளது. மாதம் ஒருமுறை உங்களுடைய பவளம் கொண்ட நகைகளை மென்மையான சோப்பு போட்டு கையிலே கழுவி எடுங்கள். அதிகளவு அழுக்கு படிந்திருந்தால் மென்மையான பிரெஷ் கொண்டு கழுவலாம். குளிக்கும் போது நகைகளையும் கழுவிடலாம் என்கிற எண்ணத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள். அது பவள மாலைகளை பெரிதும் பாதித்துவிடும்.

பலம் கொண்ட கல் நகைகள்

எப்போதும் கற்கள் பொறித்த நகைகளை தனியாகத்தான் அணிந்திட வேண்டும். வெறும் தங்கம் மட்டுமே நகைகளுடன் கூடிய அணியக் கூடாது. அதற்கு அந்த தங்க நகையும் பொருந்தாது, கற்கள் கொண்ட நகையும் எடுப்பாக தெரியாது. மேலும் மற்ற நகைகளுடன் சேர்த்து வைத்து கற்கள் நகைகள் அணிவதால், கற்களில் உராய்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எப்போதும் கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைபாடுகள் நிறைந்திருக்கும். அதனால் பார்த்து பயன்படுத்தி வருவது தான், கற்கள் பொறித்த நகைகளை நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருக்கும். அதேபோன்று கல் நகைகளை போட்டு கழற்றியவுடன் சுத்தம் செய்து வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதை மறந்துபோனால், கற்களில் இருக்கும் பிரகாசம் மங்கிவிடும். மற்ற நகைகளுடன் கற்கள் பொறித்த நகைகளை சேர்த்து வைக்கக்கூடாது. குறிப்பாக முத்துச்சரங்கள், பவள மாலைகளுடன் அது இருக்கக்கூடாது. எப்போதும் அவற்றை தனித்தனியாக பெட்டிகளில் வையுங்கள். கற்கள் கொண்ட நகைகளை கூட, ஒன்றோடு ஒன்று சேர்த்து வைக்கக்கூடாது. 

வியக்கவைக்கும் அளவுக்கு நன்மைகளை வாரி வழங்கும் விளக்கெண்ணெய்..!!

நகைகள் தனித்தனியாகத்தான் இருக்க வேண்டும்

எந்த நகையாக இருந்தாலும், அவற்றை தனித்தனியாக பெட்டியில் வைத்து பராமரிப்பது தான் சிறந்தது. எல்லாமே தங்கம் தானே என்று அனைத்தையும் ஒரே பெட்டியில் வைப்பது எல்லாம் சரிவராது. அதனால் நகைகள் ஒன்றோடு ஒன்று உரசி, தேய்மானத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல ஆரம், நெக்ளஸ் போன்றவை ஒன்றோடு ஒன்று பிணைந்து சேதாரத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை உங்களிடம் போதுமான பெட்டியில்லை என்றாலும், பட்டுப் புடவைகளுக்கு இடையில் வைப்பது, காட்டன் துணிகளில் சுத்தி வைப்பது போன்றவற்றை பின்பற்றலாம். அன்றாடம் பயன்படுத்தும் தங்க நகைகளாகவே இருந்தாலும், அதை அணிந்துகொண்டு குளிப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். அதேபோன்று நீச்சல் குளங்களுக்கு செல்லும் போதும் நகைகளை பத்திரமாக பாதுகாத்திடுங்கள். நகைகளில் இருக்கும் அழுக்குகளை உங்களால் சுத்தம் செய்ய முடியவில்லை என்றால், நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வருவதும் பாதுகாப்பாக இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!
Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்