வெறிச்சோடிப் போன தென்மாவட்டம்..,கொரொனா பயத்தால் சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும் மக்கள்..!!

By Thiraviaraj RMFirst Published Mar 22, 2020, 8:50 AM IST
Highlights

வெறிச்சோடிப் போன தென்மாவட்டம்,மக்கள் தாங்களாகவே சுய ஊரடங்கு சூப்பராக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. போலீசார் ஆங்காங்கே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கிறரர்கள். பிரதமரின் வேண்டுகோளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

T.Balamurukan

வெறிச்சோடிப் போன தென்மாவட்டம்,மக்கள் தாங்களாகவே சுய ஊரடங்கு சூப்பராக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. போலீசார் ஆங்காங்கே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கிறரர்கள். பிரதமரின் வேண்டுகோளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கானவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 உயர்ந்துள்ளது. உலகளவில்  கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், இன்று சுய ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை அத்தியாவசிய  தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுய ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பொது மக்கள் தேவைக்காக மருத்துவமனைகள், அம்மா உணவகம், மருந்தகம், ஆவின் பாலகங்கள், பெட்ரோல் நிலையம் உள்ளிட்டவை வழக்கம்போல்  இயங்குகின்றன. சமுதாய கூடங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாத்துறை, காவல்துறை, ஊடகத்துறையை தவிர்த்து பெரும்பாலானோருக்கு இன்று விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.


தென்மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை,தேனி,விருதுநகர்,திண்டுக்கல்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுய ஊரடங்கு முழுமையாக பொதுமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறிய மளிகைக் கடைகளில் இருந்து பெரிய வணிக நிறுவனங்கள் வரைக்கும் அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் ஊரே ஆங்காங்கே மயான அமைதியாக காட்சியளிக்கிறது. 
 

click me!