இத்தாலி, சொன்னத கேட்கல...அதான் அங்கே கொரோனா தொத்துது... இந்திய மக்களை நாளை சுய ஊரடங்கை கடைபிடியுங்கள்,ரஜினி

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2020, 10:51 PM IST
Highlights

பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள ஊரடங்கிற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவை ட்விட்டர் நிறுவனம் திடீரென நீக்கியிருக்கிறது.இத்தாலி சொன்னத கேட்காததால் அங்கே கொத்துகொத்தாக பலி ஏற்படுகிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

T.Balamurukan

பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள ஊரடங்கிற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவை ட்விட்டர் நிறுவனம் திடீரென நீக்கியிருக்கிறது.இத்தாலி சொன்னத கேட்காததால் அங்கே கொத்துகொத்தாக பலி ஏற்படுகிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலே இந்தியா  2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.3ம் கட்டத்திற்கு சென்றுவிடாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே 3வது அபாய கட்டத்திற்கு செல்லாமல் தப்பித்து விடலாம்.
 பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.மேலும் மார் 22-ம் தேதி சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

தற்போது, கொரோனா வைரஸால் இத்தாலியில் நடந்த பாதிப்பு நமக்கும் வந்துவிடக் கூடாது. ஆகையால் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ரஜினி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில்..,

''கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-ம் நிலையில் உள்ளது. அது 3-ம் நிலைக்குப் போய்விடக் கூடாது. வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் 2-ம் நிலையில் இருக்கும்போது, மக்களை அரசாங்கம் எச்சரித்தது. அந்த ஊரடங்கு உத்தரவிற்கு அழைப்பு கொடுத்தது. ஆனால், அங்குள்ள மக்கள் அதை உதாசீனப்படுத்திவிட்டார்கள். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகிவிட்டன. அதே மாதிரி நிலை நம் இந்தியாவில் வரக் கூடாது. ஆகவே இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருமே 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.

 ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதால் ரஜினியின் அந்த வீடியோ பதிவு நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினி வீடியோவில் கொரோனா வைரஸ் பற்றி கூறிய தகவல்கள் உறுதியானவை என கருத முடியாததால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!