பேருத்துக்கு வேப்பில்லை,மஞ்சள் தெளித்து வரவேற்ற கிராம மக்கள்.!! கோவை அருகே அசத்தும் கிராமம்.

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2020, 8:25 PM IST
Highlights

அரசுப் பேருந்து ஒன்றிற்க்கு கிராம மக்கள் வேப்பிலை கட்டி, மஞ்சள் தெளித்து கொரோனாவுக்கு சாவு மணி அடித்துள்ளனர்.இந்த சம்பவம் தற்போது மற்ற கிராமங்களுக்கு முன் உதாரணமாக நடந்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 T.Balamurukan

அரசுப் பேருந்து ஒன்றிற்க்கு கிராம மக்கள் வேப்பிலை கட்டி, மஞ்சள் தெளித்து கொரோனாவுக்கு சாவு மணி அடித்துள்ளனர்.இந்த சம்பவம் தற்போது மற்ற கிராமங்களுக்கு முன் உதாரணமாக நடந்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க  கோவை மண்டலத்தில், 300 - க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, பேருந்துகளில் மக்கள் கூட்டம் பெருமளவு குறைந்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பேருந்து சக்கரங்கள், இருக்கைகள், கம்பிகள் உள்ளிட்ட பேருந்துகளின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 கொரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவை காந்திபுரத்தில் இருந்து பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை வழித்தடத்தில்  நாதேகவுண்டன்புதூர்  வரை செல்லும் அரசுப் பேருந்துக்கு  கிராம மக்கள், பேருந்துகளின் வெளிப்புறம், உள்புறங்களில்  வேப்பிலை, துளசியை கொத்துக் கொத்தாகச் செருகி வைத்தும், பேருந்தின் படிக்கட்டுகள் மற்றும் நடைமேடையில் மாட்டுச்சாணம், மஞ்சள் கரைசலைக் கலந்தும் தெளித்துள்ளனர்.

ஆதிகால வைத்திய முறைகளில் ஒன்றான வேப்பிலை, துளசி, மஞ்சள், மாட்டுச் சாணம் உள்ளிட்டவை ஆதி காலம் முதல், கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகளாகக் கருதப்படுகிறது. அதிகளவு கிராம மக்கள் பயணிக்கும்  அரசுப் பேருந்தில் வேப்பிலை, துளசி கட்டப்பட்டு, மஞ்சள், மாட்டுச்சாணம் தெளிப்பதால் நோய்க் கிருமி தாக்காது என்கிற நம்பிக்கையில் இதையெல்லாம் செய்திருக்கிறோம் என்கிறார்கள் அக்கிராமமக்கள்.

click me!