கடைசி நிமிடத்தில்... நாளை... மறந்தும் இந்த முக்கிய 3 விஷயங்கள் பண்ணிடாதீங்க மக்களே..!

By ezhil mozhiFirst Published Mar 21, 2020, 8:20 PM IST
Highlights

நிலைமை இப்படி இருக்க இதில் நாம் உற்று கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்று இரவு 8 மணி முதல் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கும். 

கடைசி நிமிடத்தில்... நாளை... மறந்தும் இந்த முக்கிய 3 விஷயங்கள் பண்ணிடாதீங்க மக்களே..! 

மக்கள் ஊரடங்கு உத்தரவு நாளை பின்பற்ற பட உள்ள நிலையில் இன்று இரவு 8 மணி முதலே அனைவரும் வீட்டிற்குள் இருக்க தொடங்கிவிட்டனர். ஒரு சிலர் நாளை தேவைப்படும் பால் பாக்கெட் முதல் கொண்டு வாங்கி அடுக்கி வைத்து உள்ளனர்.

நிலைமை இப்படி இருக்க இதில் நாம் உற்று கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்று இரவு 8 மணி முதல் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கும். மக்கள் ஊரடங்கு உத்தரவு படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரப்போவதில்லை. நாளை இரவு 9 மணி முதல் உறங்கும் நேரம் என்பதால், இரவு முழுக்க மக்கள் நடமாட்டம் இருக்காது. அப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 36 மணி நேரம் கணக்கு வருகிறது.

இந்த 36 மணி நேரத்தில் காற்றில் கலந்து இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் அழிந்துவிடும். இந்த ஒரு நல்ல விஷயத்துக்காக நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது ஒரு பக்கமிருக்க மிகமுக்கியமாக நாளை ஒரு தினம் நியூஸ் பேப்பர் வந்தாலும் அதனை தொடாமல் இருப்பது நல்லது. அதற்கு பதிலாக டிவி போட்டு செய்திகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பால் பாக்கெட் யாராவது கொண்டு வந்து கொடுத்தாலும் அதனை தவிர்ப்பது நல்லது. அதற்கு அடுத்தபடியாக உறவினர்களோ நண்பர்களோ எதிர்வீட்டு இருப்பவர்களோ அருகே இருப்பவர்களோ வீட்டில் சும்மா தானே இருக்கிறோம் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என பேசி வீட்டிற்கு வருகை தர விருப்பம் தெரிவித்தாலும் செல்லாமல் இருப்பது நல்லது.

அவர்களுக்கும் நீங்கள் எச்சரிக்கை கொடுத்து அவரவர் வீட்டில் இருக்கும்படி சொல்லுங்கள். இந்த மூன்று விஷயங்களையும் கடைபிடித்தால் முற்றிலுமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கொரோனா பரவுவதை மிக எளிதாக தடுக்க முடியும்

அதிலும் குறிப்பாக நாளை எந்த ஒரு ஆன்லைன் பொருட்களையும் வாங்காதீர்கள். இப்பொழுதெல்லாம் சமைப்பதற்கு சிரமப்பட்டு ஆன்லைனில் உடனடியாக ஆர்டர் செய்துவிடுகிறோம். அவர்களும் பார்சல் கொண்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் கொடுத்துவிடுகிறார்கள். இவை மூன்றையும் நாளை ஒருநாள் தவிர்த்து பாருங்கள். கட்டாயம் மாபெரும் மாற்றம் இருக்கும் என்பதை நம்பலாம்.

நாம் அனைவரும் இப்போதிலிருந்தே பிரதமர் மோடி தெரிவித்தபடி, மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனாவிற்கு எதிராக போராடி வெல்வோம்.

click me!