கொரோனாவை விரட்ட பொதுமக்களுக்கு வகை வகையான சூப்... அசத்தும் இயற்கை விவசாயி..!!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2020, 9:18 PM IST
Highlights

கொரோனாவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம்.அதை பெருக்க இயற்கை விவசாயி ஒருவர் இலவசமாக காய்கறி  சூப் வழங்கி அசத்தி வருகிறார். இவரின் இந்த புதிய முயற்சி அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 T.Balamurukan

கொரோனாவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம்.அதை பெருக்க இயற்கை விவசாயி ஒருவர் இலவசமாக காய்கறி  சூப் வழங்கி அசத்தி வருகிறார். இவரின் இந்த புதிய முயற்சி அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரிலேயே பிரபல சைவ அசைவ உணவகம் நடத்திவருபவர் மூர்த்தி. எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் கூடவே பச்சைத் துண்டும் அணிந்து காட்சி தருவது தான் இவரின் டிரேடு மார்க். இவர் ஒரு இயற்கை விவசாயி. எவ்வித ரசாயன உரமும் போடப்படாத நெல், காய்கறிகளைப் பயிரிட்டு வளர்த்து வருகிறார். ஆள் உயர நெற்பயிர்கள், மனித உயரத்தைத் தாண்டியும் புடலை வளர்ச்சி என அவ்வப்போது களத்தில் சாதனைகளைக் காட்டி வருபவர் மூர்த்தி.

 சிவகாமி ரத்ததான மையம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார் இவர்.

கடந்த சில மாதங்களாகவே அரசுப் பள்ளிகளை மட்டும் தேர்வு செய்து பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு வகையான சூப்புகளை இலவசமாக வழங்கி வந்தார். பள்ளிகளுக்கே நேரில் சென்று நண்டு சூப், எலும்பு சூப், காய்கறி சூப் போன்றவற்றை தயார் செய்து வழங்கி வந்தவர்,தற்போது,கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக பேருந்து நிலையம் வரும் அனைத்துப் பொதுமக்களுக்கும் முடக்கத்தான், தூதுவளை போன்ற மூலிகைகள் போடப்பட்ட சூப் தயார் செய்து இலவசமாக வழங்கி வருகிறார்

click me!