பொங்கல் கொண்டாடும் வழிமுறைகள்

By Asianet TamilFirst Published Jan 14, 2021, 11:15 PM IST
Highlights

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே வீட்டிற்கு வண்ணங்கள் அடித்துவிட்டு,புத்தாடைகள் எடுத்துவிட்டு, தை பொங்கலுக்கு முன்னாடியே அதாவது மார்கழி 29-ம் தேதியன்று மண்பாண்டங்களை எடுத்துவிடுவார்கள். வீட்டின் அணைத்து சுற்றுப்பகுதியிலும் மாவிலை, வேப்பிலை, பூலாப்பூ என அனைத்தையும் அலங்கரித்து வீட்டிற்கு முன்னாடி பலவண்ண கோலமிட்டு பார்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

பொங்கலன்று காலையில் பெரியவர்கள் எழுந்து அடுப்பு மூட்டி அதன்மீது பானையை வைத்து சுற்றி மஞ்சளைக் காப்பாக அணிவர் பின்பு நல்ல நேரத்தை பார்த்து அதாவது காலை 6.00 AM- 8.00 AM-க்குள் பொங்க வைப்பார்கள். முதலில் பானையில் பாலை ஊற்றி கொதிக்கவிடுவார்கள் அது கொதித்து மேலே எழும்பி வடியும்போது புது அரிசியை எடுத்து அனைவரும் பொங்கலோ பொங்கல்..! பொங்கலோ பொங்கல்..! என்று கூவிக்கொண்டு அதில் போடுவார்கள். கூவும்போது பானையை சுற்றி பெரியவர்கள் முதல் சிரியவர்கள்வரை கூடி இருப்பார்கள்.

சாதம் முடிந்த பின்பு அதனை எடுத்துவந்து பெரிய வாழையிலையில் நடுவே வைத்து, இருபக்கமும் கரும்பு, மஞ்சள் செடி,சாணத்தில் பிள்ளையார் சிலை வைத்து,வெற்றிலைபாக்கு,கற்பூரம்,வாழைப்பழம்,வெண்ணெய்,தயிர்,வடை, அப்பளம் போண்டா, அடை ,பூசணி பொரியல், அவரை பொரியல் என பல உணவு வகைகளை வைத்து படைப்பார்கள்.

தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின்பு மாடுகளுக்கு ஊட்டிவிட்டு பிறகு குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அந்த இரு கரும்பின் நடுவில் தாம் செய்த உணவினை மாலையால் அலங்கரித்து, பலூன்களை கட்டி தொங்கவிட்டு அழகு சேர்ப்பார்கள். அப்பொழுதிலிருந்தே தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் இந்த பொங்கலை சிறப்பாக கையாளுகின்றனர்.

தாம் செய்த உணவினை சுற்றத்தாருக்கும், பொங்கலை காண வருவோருக்கும் அமரவைத்து வாழையிலைட்டு அவர்களுக்கு உணவளிப்பார்கள். பின்பு அங்கு கூடி இருக்கும் உறவினர்கள் அனைவரும் வெடிகள் வெடிக்க செய்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவர்கள். இந்த பொங்கலானது தமிழர்கள் உள்ள இடமெல்லாம் சிறப்பாக வழிபாடு செய்வார்கள். இந்த திருநாளே தமிழர்களின் மகிழ்ச்சி பொங்கும் பெரும்நாளாகும்.  

click me!