போகி... தமிழ் ஆண்டின் மார்கழி கடைசி நாள் கொண்டாடப்படுகிறது..!

By vinoth kumarFirst Published Jan 14, 2021, 11:11 PM IST
Highlights

ஆங்கில நாள்கட்டி படி ஜனவரி 13-ம் நாளில் கொண்டாடப்படும். சில ஆண்டுகளில் ஜனவரி 14 கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தற்போது தெலுங்கானவிலும் கொண்டாடப்படுகிறது.

ஆங்கில நாள்கட்டி படி ஜனவரி 13-ம் நாளில் கொண்டாடப்படும். சில ஆண்டுகளில் ஜனவரி 14 கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தற்போது தெலுங்கானவிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் "பழையன கழித்து, புதியன புகவிடும்" நாளாகக் கருதப்படுகிறது.பழைய பொருட்களை பயனற்ற பொருள்களை தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது.பழைய பொருள்களை அழித்துப் போக்குவதாலே போக்கி என்றனர்.அதுவே நாளடைவில் போகி என்றானது.

இந்நாளில் வீட்டில் தேவையில்லாத குப்பைகள், தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.இதோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற தேவையில்லாத எண்ணங்களை தூக்கி எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல; மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகி அன்று.. வீட்டின் முன்வாசலில் மஞ்சள் பூசி, எலுமிச்சம் பழம் அறுத்து,குங்குமம் பூசி இரண்டு முனையிலும் வைப்பார்கள்.மேலும் வாழைப்பழம்,வெற்றிலை,பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டில் பகவானை வணங்குவர்.

போகியின் போது  தோட்டத்தில் விளையும் பூசணிக்காய்,மொச்சக்கொட்டை வேகவைத்து கூட்டு செய்து இனிப்பு பலகாரம்,வடை பாயாசம் எல்லாம் செய்து படையல் போட்டு மனநிறைவோடு தெய்வங்களை வணங்குவார்கள்.

click me!