அட...கிச்சன் சிங்க் அடைப்பை நீக்க இப்படி ஈஸி வழி இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம பேச்சே!!

Published : Feb 17, 2025, 11:11 AM ISTUpdated : Feb 17, 2025, 11:19 AM IST
அட...கிச்சன் சிங்க் அடைப்பை நீக்க இப்படி ஈஸி வழி இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம பேச்சே!!

சுருக்கம்

சமைப்பதை விட கடினமானது சமையலறையை சுத்தம் செய்வது தான். அதுவும் சமையலறை சிங்க் அடைப்பை சரி செய்வதே பலருக்கும் தனி வேலையாக இருக்கும். ஆனால் கஷ்டமே படாமல் ரொம்ப ஈஸியாக கிச்சன் சிங்க்கில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வழி உள்ளது. இந்த எளிய வழி இதுவரை உங்களுக்கு தெரியவில்லை என்றால், ஒருமுறை முயற்சி செய்து பாருங்க.

சமையல் அறையில் உள்ள சிங்க்கில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்படுவது அனைவரின் வீட்டிலும் வழக்கமாக நடக்கக் கூடியது தான். சிங்க்கை எவ்வளவு சுத்தமாக பராமரித்தாலும் சில சமயங்களில் நமக்கும் தெரியாமல் ஏதாவது கறிவேப்பிலை, உணவுபொருட்கள், முடி, அழுக்கு, பாசி உள்ளிட்ட பொருட்களை சென்று தேங்கி நின்று கொண்டு கழிவுநீர் செல்லும் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி விடும். 

சமையலறை சிங்க் அடைப்பை சரி செய்வதே சிலருக்கு தினசரி வேலையாக இருக்கும். இன்னும் சிலரின் வீடுகளில் அடிக்கடி அதிக விலைக் கொடுத்து பொருட்கள் வாங்கி இதை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். இன்னும் சிலருக்கும் அடிக்கடி சிங்க் குழாயை மாற்றி வேண்டிய நிலை ஏற்படும். இப்படி சமையலறை சிங்க் அடைப்பை சரி செய்வதற்கு நீங்களும் தினசரி போராடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் இது உங்களுக்கானது தான். 

இரண்டு பொருட்கள் போதும் :

இனி அதிக விலை கொடுத்து கெமிக்கல்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியோ, பிளம்பரை கூப்பிட்டோ கஷ்டப்பட வேண்டும். ஈஸியாக இரண்டே இரண்டு பொருட்களை மட்டும் வைத்து, இந்த பிரச்சனையை சரி செய்து விடலாம். என்ன அந்த இரண்டு பொருட்கள் என யோசிக்கிறீர்களா? இவைகள் கூட உங்கள் வீட்டில் ஏற்கனவே இருக்கும் பொருட்கள் தான். இதை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் வீட்டு சமையலறை சிங்க்கில் இனி அடைப்பு என்பதே ஏற்படாது. அந்த இரண்டு பொருட்கள் வேறு எதுவும் கிடையாது. பேக்கிங் சோடாவும், வெள்ளை வினிகரும் தான். 

எப்படி பயன்படுத்துவது ?

நான்கு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து சிங்க் குழாயில் தூவி விடுங்கள். பிறகு அதன் மீது அரை கப் வெள்ளை வினிகரை ஊற்றி விடுங்கள். இதை அப்படியே ஒரு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு தண்ணீரை வெது வெதுப்பாக காய வைத்து, அதை அடைப்பு உள்ள சிங்க் குழாயில் ஊற்றி விடுங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் சிங்க் குழாயில் அடைத்துக் கொண்டிருந்த அழுக்கு, பாசி உள்ளிட்ட அனைத்து அடைப்புகளும் நீங்கி விடும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் கூட போதும். சிங்க் சுத்தமாகவும், அடைப்பு பிரச்சனை இல்லாமலும் இருக்கும்.

ஒருவேளை உங்கள் வீட்டில் பேக்கிங் சோடா, வெள்ளை வினிகர் இரண்டு இல்லை என்றால் கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் சிறிதளவு காபி தூளை எடுத்து, சிங்க்கில் தூவி விட்டு, அதன் மீது லிக்விட் சோப் அல்லது சோப் ஆயிலை ஊற்றி விடுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரை அந்த குழாயில் ஊற்றினால் அடைப்பு முழுவதுமாக நீங்கி விடும். 

அடைப்பு போகவில்லை என்றால் என்ன செய்வது?

இந்த முறையை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திய பிறகும் சமையலறை சிங்க்கில் அடைப்பு ஏற்படுவது தொடர்ந்தால் உடனடியாக பிளம்பரை அழைத்து உடனடியாக வேறு பைப்பை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் சமையலறையில் துர்நாற்றம், கழிவுநீர் கசிவு ஆகியவை ஏற்பட்டு விடும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்