
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நம்முடைய உணவு முறைகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. ஊட்டச்சத்திற்காக நாம் காய்கறிகள், பழங்கள் என பலவிதமான உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் அவற்றில் உள்ள சத்துக்களை முழுமையாக நாம் பெற செய்வது நம்முடைய உணவில் சேர்க்கும் சிறு சிறு பொருட்கள் தான்.
இந்திய சமையல் முறையில் பலவிதமான மசாலா பொருட்களை தினமும் பயன்படுத்துகிறோம். இவை உணவிற்கு சுவையை தருவதுடன், நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றன. அப்படி நம்முடைய உடலில் அசந்து போகும் அளவிற்கு பல நன்மைகளையும் தந்து, மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது தான் கிராம்பு. Syzygium aromaticum என்ற மரத்தில் இருந்து கிடைக்கும் உலர்ந்த மலர் மொட்டுகள் தான் இந்த கிராம்பு. கிராம்பில் உள்ள யூஜெனால், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி, சளி, இருமல் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கிராம்பால் கிடைக்கும் நன்மைகள் :
தாகம், வாந்தி உணர்வு நீங்கும். சுவாச கோளாறுகளை சரி செய்கிறஆ. வயிற்று உப்புசம், வலியை குறைக்கும். நாள்பட்ட இருமல், சளி தொல்லை நீங்கும். செரிமானத்தை அதிகரிக்கும். கண்கள், பற்களுக்கு நல்லது. வாய் துர்நாற்றத்தை போக்கும். கர்ப்ப காலத்தில் காலையில் ஏற்படும் சுகவீனத்தை போக்க உதவுகிறது. அலர்ஜியை போக்கும்.
தினமும் ஒரு கிராம்பு சாப்பிட்டால்...
தினமும் ஒரு கிராம்பினை மென்று சாப்பிட்டு வந்தால் செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, உணவுகளை செரிக்க செய்து, ஊட்டத்துக்களை முழுமையாக உடலில் உறிஞ்ச உதவுகிறது. அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்கும். இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகள் ஈறு நோய்கள், பற்சிதைவை ஏற்படுத்து பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். இதனால் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கி, வாய் துர்நாற்றத்தை போக்க சிறந்த தேர்வாக கிராம்பு உள்ளது.
கிராம்பு சாப்பிடும் முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அது சூடானதும் சிறிது பசும் நெய்யை ஊற்றி, அதோடு 2 அல்லது 3 கிராம்புகளை போட்டு லோசாக வறுக்க வேண்டும். பிறகு அந்த கிராம்புகளை மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக எந்த மருந்திற்கும் கட்டுபடாமல் பாடாய் படுத்தும் சளி, இருமல் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவாச கோளாறுகளும் நீங்கும்.
எத்தனை கிராம்பு சாப்பிடலாம்?
கிராம்பு யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதால் அவரவரின் வயதிற்கு ஏற்ற பலன்களை இது அளிக்கிறது. 6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகள் சாப்பிட கொடுக்கலாம். பெரியர்கள் மற்றும் வயதானவர்கள் 2 முதல் 3 கிராம்புகளை சாப்பிடலாம். ஒரே நேரத்தை மொத்தமாக வாயில் போட்டு மென்று சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு கிராம்பாக தான் வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு கிராம்பு...
இது போல் தினமும் கிராம்புகளை சாப்பிட்டு வந்தால் கிராம்பில் உள்ள யூஜெனால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலை பாதுகாக்கும். இதனால் சளி, காய்ச்சல், இருமல், பல் வலி, தலை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் கிராம்பினை சேர்ப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். கிராம்பு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலமும், சிறந்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமும் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.