ஈவினிங் ஸ்நாக்ஸாக சூடாகவும் சுவையாகவும் 'ஜவ்வரிசி வடை' செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published May 23, 2024, 3:32 PM IST
Highlights

இந்தப் பதிவில் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக ஜவ்வரிசி வடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான டீக்கடைகளில் மாலை 4 மணி அளவில் சுட சுட வடை, பஜ்ஜி, போண்டா செய்வார்கள். இதனை சிலர் தங்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பார்கள் இன்னும் சிலரோ வீட்டிலேயே ஏதாவது ஸ்னாக்ஸ் செய்வார்கள். அந்த வகையில் இன்று உங்களது வீட்டில் ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக எதையாவது செய்ய விரும்பினால் உங்களுக்கான ஒரு சூப்பரான ரெசிபியை கொண்டு வந்துள்ளோம். 

உங்கள் வீட்டில் ஜவ்வரிசி இருக்கிறதா..? அதைக் கொண்டு மொறுமொறுப்பான வடை சுடலாம். இந்த ஜவ்வரிசி வடையை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் இந்த வடை செய்வது மிகவும் சுலபமானது. சரி வாங்க இப்போது ஜவ்வரிசியில் எப்படி வடை சுடலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கட்லெட் செஞ்சு கொடுங்க.. ரெசிபி இதோ!

ஜவ்வரிசி வடை செய்ய தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
சோம்புத் தூள் - 1/2 ஸ்பூன் 
இஞ்சி - 1 துண்டு
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் 'சோயா கட்லட்' ... எப்படி செய்வது..?

செய்முறை:
ஜவ்வரிசி வடை செய்ய முதலில், எடுத்து வைத்த ஜவ்வரிசையை தண்ணீரில் நன்கு கழுவி, பிறகு அதை 2 மணி நேரம் ஊற வையுங்கள். இப்போது அது நன்கு ஊறிப் போய் இருக்கும். இப்போது அவித்த உருளைக்கிழங்கை தோலுரித்து அதில் ஜவ்வரிசி போட்டு நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் சோம்பு, சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். முக்கிய குறிப்பு தண்ணீரை ஒருபோதும் இதில் சேர்க்க வேண்டாம். அவ்வளவுதான் இப்போது வடை சுடுவதற்கான மாவு தயார்.

இப்போது வடை சுட முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் கையில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தி எடுத்தால் ருசியான ஜவ்வரிசி வடை ரெடி..!! இந்த ரெசிபியை உங்களது வீட்டில் ஒருமுறை செய்து பார்த்து சுவை எப்படி இருந்தது என்பதை எங்களுக்கு தெரிவிக்க மறக்காதீர்கள்...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!